கடலை மாவு தோசை



என்னென்ன தேவை?

கடலை மாவு - 2 கப்,
அரிசி மாவு - 1 கப்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
சீரகம் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளவும். இத்துடன் பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, சீரகம் சேர்த்து கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி மாவை ஊற்றி தோசையாக வார்த்து எண்ணெய் அல்லது நெய் விட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.