முளைகட்டிய தானியங்கள் தோசைஎன்னென்ன தேவை?

தோசை மாவு - 4 கப்,
முளைகட்டிய தானியங்கள் - 1 கப் (கலந்த தானியங்கள் கடைகளில் கிடைக்கிறது),
தக்காளி - 3,
வெந்தயக்கீரை - 1 கப்,
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வெந்தயக்கீரை ஆய்ந்து, சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சிறிது வதக்கிக் கொள்ளவும். முளைகட்டிய தானியங்களை ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். தக்காளியை நறுக்கி அதையும் நன்கு அரைத்துக் கொள்ளவும். வதக்கிய வெந்தயக்கீரை, அரைத்த தானியக்கலவை, அரைத்த தக்காளி அனைத்தையும் உப்பு சேர்த்து தோசை மாவோடு கரைத்து, தோசைகள் சுடவும். இந்த தோசையை ஆப்பத்திற்கு மேல்பக்கம் மூடி வேக வைப்பது போல் வேக வைத்து திருப்பி போடவும். ஓரங்களில் லேசாக எண்ணெய் ஊற்றி சுடவும். கார சட்னி, காரமான தக்காளி சட்னியுடன் சூடாக பரிமாறவும்.