முளைக்கீரை அடைஎன்னென்ன தேவை?
 
இட்லி புழுங்கலரிசி - 1 கப்,
இளசான தண்டு இல்லாத முளைக்கீரை - ஒரு சிறு கட்டு (பொடியாக நறுக்கவும்),
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1/4 கப்,
காய்ந்தமிளகாய் - 4,
இஞ்சி - ஒரு சிறு துண்டு,
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிது,
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?
 
புழுங்கலரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பருப்பு வகைகளையும் தனியாக ஊறவைக்கவும். ஊறிய அரிசியுடன் இஞ்சி, மிளகு, காய்ந்தமிளகாய் சேர்த்து கரகரப்பாக அடைமாவு பதத்திற்கு அரைக்கவும். பருப்பு வகைகளையும் தனியாக அரைக்கவும். அரிசி மாவுடன், அரைத்த பருப்பையும் சேர்த்து உப்பு, பெருங்காயத்தூள் போட்டுக் கலந்து, முளைக்கீரையை சேர்க்கவும். கல் காய்ந்ததும், மிதமான தீயில் ஒவ்வொரு அடையாக தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமானதும் எடுத்து, இட்லி மிளகாய்ப்பொடியுடன் பரிமாறவும்.