முருங்கைக்கீரை தோசை



என்னென்ன தேவை?

முருங்கைக்கீரை - 1 கப்,
பச்சரிசி - 1/2 கப்,
புழுங்கலரிசி - 1 கப்,
உளுந்து - ஒரு கைப்பிடி,
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கீரையைத் தவிர மற்ற அனைத்தையும் நன்கு ஊறவைத்து அரைக்கவும். பின்பு 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின்பு புளித்த மாவில் முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி மாவை ஊற்றி தோசையாக வார்த்து எண்ணெய் விட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.