முருங்கைக்கீரை அடைஎன்னென்ன தேவை?

புழுங்கலரிசி - 1 கப்,
முருங்கைக்கீரை - 1/2 கப்,
மொச்சை - 1 கப்,
பாசிப்பருப்பு - 1/2 கப்,
இஞ்சி - சிறு துண்டு,
பூண்டு - 4 பல்,
காய்ந்தமிளகாய் - 2,
பொடியாக நறுக்கிய முருங்கைப்பிஞ்சு - 10 (இளஞ்சிவப்பு நிறத்தில் மெல்லிய கொடி போல இருக்கும்),
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்,
நெய், உப்பு - தேவைக்கு.

எப்படி செய்வது?

அரிசியை ஊறவைக்கவும். மொச்சை, பாசிப்பருப்பை சேர்த்து தனியாக ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசி, பருப்புடன், இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாய் சேர்த்து அடைமாவு பதத்திற்கு அரைக்கவும். கடாயில் சிறிது நெய்யில் முருங்கைக்கீரை, முருங்கைப்பிஞ்சை வதக்கி மாவுடன் சேர்க்கவும். வெங்காயத்தை சேர்த்து, மாைவ நன்றாகக் கலந்து, தேவையான உப்பு போட்டு, கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடை தட்டி, இருபுறமும் நெய்விட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
 
குறிப்பு: முருங்கைப் பூவிலும் இந்த அடையை செய்யலாம்.