கொண்டைக்கடலை தோசை



என்னென்ன தேவை?

கொண்டைக்கடலை - 2 கப்,
காய்ந்தமிளகாய் - 7,
பூண்டு - 2 பல்,
சீரகம் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கொண்டைக்கடலையை 5 மணி நேரம் ஊறவைத்து பூண்டு, காய்ந்தமிளகாயுடன் கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை. சீரகம், உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி மாவை ஊற்றி தோசையாக வார்த்து எண்ணெய் விட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.