வரகு தோசைஎன்னென்ன தேவை?

சிறுபயறு - 100 கிராம்,
வரகு - 50 கிராம்,
இஞ்சி - சிறிய துண்டு,
பச்சைமிளகாய் - 1,
உப்பு - தேவைக்கு.

அலங்கரிக்க...

பொடியாக நறுக்கிய (பெரிய வெங்காயம், கொத்தமல்லித்தழை) - தேவைக்கு.
 
உள்ளே வைக்க...

ரவா உப்புமா.
 
எப்படிச் செய்வது?

நறுக்கிய வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். பயறு, வரகு இரண்டையும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ஊறியதும் பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து அரைத்து உப்பு போட்டு கலக்கவும். தோசைக்கல்லில் மெல்லியதாக வார்த்து வெங்காயம், மல்லித்தழை தூவவும். வெந்ததும் நடுவில் ரவா உப்புமா வைத்து மடிக்கவும். சூடாக பரிமாறவும்.