அரிசி அடைஎன்னென்ன தேவை?

இட்லி புழுங்கலரிசி - 1/2 கப்,
பச்சரிசி - 3/4 கப்,
தேங்காய்ப்பால் - 1 கப்,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
பொடியாக நறுக்கிய இஞ்சி,
கறிவேப்பிலை - சிறிது,
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவைக்கு.
 
எப்படிச் செய்வது?

புழுங்கலரிசி, பச்சரிசி இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அரிசியைக் களைந்து, மிளகு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இந்த மாவுடன் தேங்காய்ப்பால், தேங்காய்த்துருவல், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலந்து, தோசைக்கல் காய்ந்ததும் மிதமான தீயில், அடை தட்டி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.