நவதானிய அடை



என்னென்ன தேவை?

இட்லி புழுங்கலரிசி - 1 கப்,
கொள்ளு, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, தினை, கேழ்வரகு (அனைத்தும் முளைகட்டியது),
காராமணி, கருப்பு உளுந்து - தலா 1/4 கப்,
எண்ணெய், இஞ்சி, மிளகு, காய்ந்தமிளகாய் - காரத்துக்கு ஏற்ப,
 உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். காராமணி, கருப்பு உளுந்து இரண்டையும் தனித்தனியே அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசியுடன் இஞ்சி, மிளகு, காய்ந்தமிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அதேபோல் முளைகட்டிய தானியங்கள், காராமணி, உளுந்து அனைத்தையும் ஒன்றாக கரகரப்பாக அரைக்கவும். இரண்டு மாவையும் கலந்து, தேவையான உப்பு சேர்த்து, கல் நன்கு சூடானதும், மிதமான தீயில் அடை தட்டி, இருபுறமும் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.