பூசணி தோசை



என்னென்ன தேவை?

பச்சரிசி - 2 கப்,
வெள்ளைப் பூசணியின் சதைப்பகுதி - 1 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பூசணிக்காயின் உட்புறம் உள்ள பகுதியில் விதைகளை எடுத்துவிட்டு, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு அரிசி, பருப்பு, பூசணித் துண்டுகள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைத்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும். சூடாக பச்சை துவையலுடன் பரிமாறவும்.
 
பச்சை துவையல்

துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
புளி - கொட்டை பாக்களவு,
காய்ந்தமிளகாய் - 3,
உப்பு - தேவைக்கு,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்.

துவரம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, பெருங்காயம், புளி, காய்ந்தமிளகாய், உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து மிக்சியில் சற்று கரகரப்பாக அரைக்கவும். பச்சை துவையல் ரெடி.