கேழ்வரகு வெல்ல தோசை



என்னென்ன தேவை?
 
கேழ்வரகு மாவு - 1 கப்,
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 1 டீஸ்பூன்,
வெல்லத்தூள் - 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
முந்திரி துருவியது - 1 டீஸ்பூன்,
நெய் - சுட்டெடுக்க தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
 
வெல்லத்தில் 2 கப் தண்ணீர் விட்டு லேசாகக் கொதிக்க வைத்து, வடிகட்டி வைக்கவும். பாகு ஆறியதும் அதில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி துருவல் எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கல் காய்ந்ததும் வெல்ல தோசைகளை நெய் ஊற்றிச் சுட்டெடுத்து சூடாக பரிமாறவும்.