பாலக் தோசை



என்னென்ன தேவை?
 
பச்சரிசி - 1 கப்,
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய பாலக் (பசலைக்கீரை) - 1 கப்,
பச்சைமிளகாய் - 3,
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?
 
பச்சரிசியையும், உளுத்தம் பருப்பையும் ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய அரிசி, பருப்புடன் பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், நறுக்கிய பாலக் எல்லாம் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும். 5 மணி நேரத்திற்கு புளிக்க வைக்கவும். புளித்து பொங்கியதும் தோசைகளாக வார்த்தெடுத்து சூடாக பரிமாறவும். கீரையில் வழவழப்பு இருப்பதால் உளுந்தை குறைத்துப் போடவும்.