ப்ரியங்களுடன்...



பட்டு நூலில் தங்க நகைகளுக்கு இணையான அழகுமிக்க ஆபரணங்களா? கட்டுரையை படித்ததும் ஆச்சரியப்பட்டு போனேன்.
 - அயன்புரம் த.சத்தியநாராயணன், பட்டாபிராம்.

‘பிரைடல் ரென்டல் ஜுவல்லரியில் பிசினஸ்’ ‘மஞ்சு’வின் ஆர்வமும், உழைப்பும் நமக்கும் தந்தது உத்வேகம். ‘நதிகளை வாழ விடுவதன் மூலமே நாம் வாழ முடியும்’ என்ற வரிகள் வைர வரிகள்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

‘கந்தக மலர்கள்’ படித்ததும் நாம் மகிழும் இந்த ஒலிகளுக்கு பின்னால் எத்தனை கைகளின் வலி உள்ளது என்று புரிந்தது. மனிதர்கள் படும் அல்லல்களை விரிவாக விளக்கிய ‘குங்குமம் தோழியின்’ இச்சேவைக்கு ஒரு ராயல் சல்யூட்.
- உஷா முத்துராமன், மதுரை.

சிறிய வீட்டைக்கூட நாம் உபயோகிக்கும் முறையில் தான் அதன் அழகு உயர்வாக தெரியும். சரஸ்வதி சீனிவாசன் அவர்கள் அனைவரது வீடுமே அழகுற யோசனைகள் சொல்கிறார். பாராட்டுகள் பல. பூக்களால் ஆன நகைகள் மனதை மகிழ்வித்தன. கந்தக மலர்கள் கண்களிலிருந்து நீரை வரவழைத்தது. முன்னது ஆனந்தக் கண்ணீர். பின்னது நெஞ்சை பிழிய வைத்த சோக கண்ணீர்.
- ஜி.ராஜேஸ்வரி, சென்னை-88.

அட்டையில் ஒயிலான தோற்றத்தில் ‘ஹன்சிகா’வைப் பார்த்ததுமே ஒரு ‘ஓ’ போட்டுட்டேன்! அம்புட்டு அழகு..! பக்கத்து பக்கம் விளம்பரமும் கொடுத்து அவர்களின் வளர்ச்சி, தொழில்நுட்பம் பற்றி ‘ஷாப்பிங்’கிலே விவரமாக கொடுத்தும் கௌரவித்தது பெருமையாக இருந்தது.
- சுகந்தி நாராயணன், வியாசர்பாடி.

‘ஆந்திரத்து நர்கீஸ்’ என அழைக்கப்பெற்று ரசிகர்களின் மனங்களில் தடம்பதித்த பழம் பெரும் நடிகை ‘ஜமுனா’வின் திரையுலக வாழ்க்கை வெகுசுவை...
- வி.ராஜேஸ்வரி, போடிநாயக்கனூர்.

‘டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க வேண்டுமா?’- பயனுடைய செய்தி இது.
- இல.வள்ளிமயில், திருநகர்.

பலகாரங்கள் ஜீரணமாக, வயிற்றுப் பிரச்சனைகள் தோன்றாமலிருக்க சித்த மருத்துவர் சாய் சதீஷ் கொடுத்திருக்கும் ‘டிப்ஸ்’ பயனுள்ள ஆலோசனை என்பது குறிப்பிடத்தக்கது.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

அலட்டிக் கொள்ளாத அழகு மங்கை ஜமுனா..! தெளிவான... நிறைவான கட்டுரை செல்லுலாய்ட் பெண்கள்.
- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரு.