வீடு தேடிவரும் ஹெல்த் ட்ரிங்ஸ்



-பி.கமலா தவநிதி

உடலை வலுவாக்க தினமும் சத்தான பழச்சாறுகள், கீரைச்சாறுகள் என்று பருக ஆசையாக இருக்கிறதா? ஆனால் அவற்றைத் தேடுவதற்கோ தயாரிப்பதற்கோ நேரமில்லையா? கவலையை விடுங்கள். உங்கள் உடலுக்கு ஏற்ற சத்தான ஆரோக்கியமான பானங்கள் பால் பாக்கெட் கொண்டு வந்து போடுவதைப் போல காலை 6 மணிக்கு முன்னரே உங்கள் இல்லம் தேடி வந்துவிடும். சௌமியா - கணேஷ் இணையர் இதை சாத்தியமாக்கியுள்ளனர்.

சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு வீட்டாரிடத்தில் முழுமையான ஆதரவு கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம். இதில் கணவரின் ஆதரவை எதிர்பார்ப்பது என்பதெல்லாம் எட்டாக் கனி தான். சமூக சீர்திருத்தங்களில் பங்களிக்கும் பல பெண்களுக்கு மத்தியில், “சமுதாயத்தின் மீதும் மக்களின் ஆரோக்கியத்தின் மீதும் எங்களுக்கு அக்கறை உண்டு. அவர்கள் உடல்நலனுக்காக சத்தானவற்றை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே எங்கள் லட்சியம்” என்று கைக்கோர்க்கிறார்கள் சௌமியா-கணேஷ்

சென்னை - மும்பை என வெவ்வேறு நகரங்களில் பிறந்த இவர்கள் திருமணத்தால் ஒன்று சேர்ந்து துபாயில் குடியேறினர். பல வருடங்கள் அங்கேயே பணிபுரிந்து துபாய்வாசி ஆகினர். ”மற்ற நாட்டு மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகம் இருப்பதையும், நம் நாட்டு மக்களிடம் அந்த விழிப்புணர்வு இல்லாததும், சர்க்கரை நோய், உடல் பருமன், எய்ட்ஸ் என பலவேறு வகையான வியாதிகள் பரவிவருவதும், நோய்த் தாக்குதல் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கவும் வாய்ப்பிருப்பதை பற்றியும் ஆழமாக விவாதித்த விளைவுதான் துபாயில் தங்கள் உழைப்பால் சேர்த்த சொத்துகளை எல்லாம் விற்று விட்டு மீண்டும் சென்னைக்கே வந்து காபவுட்டு (CABOUTU)  என்ற ஆரோக்கிய நிலையத்தை உருவாக்கினோம்” என்று புன்னகைக்கிறார் உரிமையாளர் சௌமியா. 

”நம் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு ஊட்டச்சத்துகள் தேவை என்பதை உறுதியாக நம்புகிறோம். காய்கறி, பழங்களில் இருந்து அதிகப்படியான சத்துகளை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதே எங்கள் குறிக்கோள். அதற்காக நாங்கள் கோல்ட் பிரஸ்ட் டெக்நாலஜி (COLD PRESSED TECHNOLOGY), அதாவது பழங்கள் மற்றும் காய்கறிகள் மீது அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்பட்டு சாறு எடுக்கும் முறையை பயன்படுத்துகிறோம். அவ்வாறு செய்யும்போது சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.

பொதுவாகவே பழச்சாறுகளை அரைத்து வடிகட்டி குடிக்கும்போது அதிலுள்ள நார்ச்சத்து வீணாகி விடுகிறது. அந்த நார்ச்சத்தையும் தவற விடாமல் தருவதற்கு தான் ஸ்மூத்தி, சூப், சாலட் மற்றும் ப்ரிபையோட்டிக் பானங்கள் போன்றவையும் செய்து தருகிறோம். எங்கள் தயாரிப்பில் அனைத்தும் உயர்தரமான பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதில் தீங்கு விளைவிக்கும் எந்த வித ரசாயனங்களும் இல்லை. 

எங்களிடம் க்ரீன் ஜூஸ், ஃப்ரூட் ஜூஸ், வெஜிடபிள் ஜூஸ், ப்ரோபையோட்டிக்ஸ் (probiotics), நட் மில்க் (Nut milk), ஸ்மூத்தீஸ் (smoothies), வே ப்ரோடீன் ஸ்மூத்தீஸ் (whey protein smoothies), சூப், சாலட்கள் ஆகியவை கிடைக்கும். 

* கோல்ட் ப்ரஸ்டு க்ரீன் ஜூஸ்
பெருஞ்சீரகம், வெந்தயம், ப்ரோக்கோலி, குடைமிளகாய், வெள்ளரி, எலுமிச்சை, சீரகம், ஏலக்காய், பெரிய நெல்லிக்காய், முட்டைகோஸ், நீர் பூசணி, செலரி, கோதுமை புல், தண்டு கீரை, சிறு கீரை, வெற்றிலை, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, முருங்கை இலை, போன்று 73 வகை கீரைகளின் சத்துகள் கிடைக்கும் வகையில் செய்து தரப்படும். 

மேலும் அனைத்திலும் இஞ்சி மற்றும் ஹிமாலயன் உப்பு சேர்க்கப்படுவதனால் வைட்டமின் சி, கே, ஏ, கால்சியம், அமினோ ஆசிட், ப்ரோடீன், மினெரல், அயர்ன் போன்ற சத்துகள் நம் உடலுக்கு அப்படியே கிடைக்கிறது. புதினா மற்றும் எலுமிச்சை நல்ல ஆண்டிஆக்சிடன்ட் மற்றும் ஆண்டிஇன்ஃபளமேட்டரி ஆக செயல்படுகிறது. இந்த பானங்களால் இதயம் பலப்படுகிறது, அஜீரண கோளாறுகள் சரி செய்யப்பட்டு உடலின் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. காயம், வீக்கம், தொண்டை வலி போன்றவை குணப்படுத்தப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.

* கோல்ட் ப்ரஸ்ட் ப்ரூட் ஜூஸ்
இதில் முழுக்க முழுக்க இளநீரின் பங்கு தான் அதிகம்.  கேரட், ஆரஞ்சு, அன்னாசி, தர்பூசணி, மாதுளை, ஸ்வீட் லைம், இஞ்சி, துளசி, அக்டிவேட்டட் சார்கோல் போன்றவற்றால் தயார் செய்யப்படுகிறது. வைட்டமின் பி, சி, இருப்பதால் தோல் பராமரிப்பில் முக்கியமாக உதவுகிறது. 

வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, மதுவின் பாதிப்புகள், தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலில் உள்ள எலெக்ட்ரோலைட் அளவை கட்டுக்குள் வைக்கிறது. கோல்ட் ப்ரஸ்ட் வெஜிடபிள் ஜூஸ் ஆப்பிள், கேரட், பீட்ரூட், இஞ்சி, வெள்ளரி, கீரைகள், ப்ரோக்கோலி, செலரி, எலுமிச்சை, மஞ்சள் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.  இவற்றில் வைட்டமின் பி, சி, கே, B8, அயர்ன், ஜின்க், மினெரல்ஸ் நிறைந்துள்ளது. மேலும் இவை எலும்பு, தசை மற்றும் நரம்புகளின் செயல்பாடுகளை சிறக்க வைக்கிறது. சிறந்த பாடி மற்றும் ஸ்கின் க்ளென்சர் ஆக செயலாற்றி உடலை வலிமையாக்குகிறது. 

* ப்ரோபையோட்டிக்ஸ்
சில உணவுகளில் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் வாழ்ந்து கொண்டிருக்கும். அந்த உணவுகள் நம் உடலுக்கும் ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்யும். நம் உடலே நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்கள் என இருவகை பாக்டீரியாக்களால் ஆனது. இந்த ப்ரோபையோட்டிக்ஸ் என்பது நல்ல மற்றும் உதவும் பாக்டீரியா என்றே அழைக்கப்படும். தயிர், கொத்தமல்லி, புதினா, செலரி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஹிமாலயன் உப்பு போன்றவை சேர்க்கப்படுவதால் தொற்றுநோய்கள் வராமல் தடுப்பதோடு, ஜீரண மண்டலத்தை வலுப்பெற செய்கிறது. 

* நட் மில்க் (Nut milk)
பாதாமில் இருந்து பால் எடுக்கப்பட்டு, பட்டை, டார்க் சாக்லேட், கோக்கோ, தேன் போன்றவை சேர்த்து தயார் செய்யப்படுகிறது. பாதாம் பாலில் கொலஸ்ட்ரால், சாச்சுரேட்டட் கொழுப்பு இல்லாததால் இதயத்திற்கு பலம் கொடுத்து, இதய நோய்களில் இருந்து காக்கிறது.  இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் நகம், தோல், முடி ஆகியவற்றிற்கு மிகவும் பயனளிக்கிறது. 

மேலும் அயர்ன், ரிபோபிளேவின் இருப்பதால் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் லாக்டோஸ் இண்டாலரென்ட் பிரச்னையால் குழந்தைகளுக்கு பால் சேராமல் வாந்தி, வயிற்று வலி, அஜீரணம் போன்றவையால் அவதிப்படுவார்கள்.  அவர்களுக்கு இந்த நட் மில்க் நல்ல தீர்வு. அதில் கிடைப்பதை விட அதிக சத்துகள் இதில் கிடைக்கிறது என்பதால் தாராளமாக இதை பருகலாம். 

* ஸ்மூத்தீஸ் (smoothies )
ஸ்மூத்தீஸ் என்பது பழங்கள், காய்கறிகளின் தோல், விதை என எதையுமே நீக்காமல் அரைத்து, வடிகட்டாமல் தயார் செய்வதுதான். பொதுவாக பழங்களை அரைத்து, வடிகட்டிவிடுவதனால் அதில் உள்ள நார்ச்சத்து நமக்கு கிடைக்காமலே போய்விடுகிறது. ஆனால் ஸ்மூத்தியில் நமக்கு சத்துகள் வீணாகாமல் அப்படியே கிடைக்கிறது. தயிர், ஸ்டராபெர்ரி, பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், பாதாம், மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா, பால், பீனட் பட்டர், டார்க் சாக்லேட், கோக்கோ பவுடர், முந்திரி, பிஸ்தா, வால்நட், அத்தி, திராட்சை, தேன் போன்ற பொருட்கள் வைத்து தயார் செய்யப்படுகிறது. 

பொட்டாசியம், காப்பர், அயர்ன், ஃபைபர், ஆண்டிஆக்சிடன்ட்ஸ், பைட்டோநூற்றிஎன்ட்ஸ், கார்போஹைட்ரெட்ஸ், எலெக்ட்ரோலைட்ஸ், கொழுப்பு மற்றும் புரதமும் அதிகம் உள்ளது.  மேலும் வைட்டமின் எ, சி, ஈ, பீட்டா கரோட்டின் போன்ற அதிகப்படியான நம் உடலுக்கு நாள்தோறும் தேவைப்படும் சத்துகள் அடங்கியுள்ளது. இதனால் மென்மையான செரிமான செயல்முறை உடலின் நிகழ்த்தப்படுவதோடு மட்டுமல்லாமல், ரத்த ஓட்டத்தை சீராக வைத்து உடலில் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. 

மலச்சிக்கல், சுவாசக்கோளாறுகள், இருமல், சளி, இரத்தசோகை, இதயக்கோளாறுகள், சர்க்கரை நோய், வெப்ப பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், உடல் சோர்வு போன்றவற்றிற்கு நல்ல தேர்வு அளிக்கிறது. கூந்தல், கண், பல் மற்றும் சரும பராமரிப்புகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக புற்றுநோய் செல்களை அளித்து எதிர்த்து போராடவும் உதவுகிறது.

நம் சமூகத்தில் வயிறு அதிகளவு நிறைந்தால் மட்டுமே சத்துகள் கிடைக்கும் என்ற தவறான எண்ணம் அனைவர் மனதிலும் பரவலாக இருக்கிறது. அனால் அது தவறான புரிதல். காலை உணவிற்கு பதிலாக ஏதோ ஒரு வகை ஸ்மூத்தி குடித்தோமானால் அதுவே போதுமானது. அதிலே ஒருநாளுக்கு தேவையான அனைத்து சத்துகளும் கலோரிகளும் கிடைத்துவிடும். ஒரு ஸ்மூத்தி குடித்தால் மூன்று மணி நேரத்துக்கு பசி இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

* வே ப்ரோடீன் ஸ்மூத்தீஸ் (whey protein smoothies)
பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம், ஆப்பிள், சப்போட்டா, பால், பீனட் பட்டர், கோக்கோ, டார்க் சாக்லேட், பாதாம், முந்திரி, திராட்சை, பிஸ்தா, அத்தி, வால்நட் கொண்டு தயாரிக்கப்படுகிறது. முக்கியமாக வே ப்ரோடீன் சேர்க்கப்படும். வே ப்ரோடீன் என்பது சீஸ் தயாரிப்பில் இருந்து பிரித்து எடுக்கப்படும் திரவம் போன்றது.

பொட்டாசியம், ப்ரோடீன், மினெரல், ஃபைபர், காப்பர், அயர்ன் சத்துக்கள் நிறைந்துள்ளன. ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒவ்வொரு நாள் உடற்பயிற்சிக்கு பிறகும் இதை குடிக்கும் போது ஆரோக்கியம் மேம்படும். மேலும் ஸ்மூத்திஸில் உள்ள அனைத்து குணங்களையும் பெற்றது இது. 

* சூப் மற்றும் சாலட்கள்
சூப்களிலும், சாலட்களிலும், எந்த வகையான ரசாயனப் பொடிகளும் சேர்க்காமல் மருத்துவ குணங்கள் கொண்ட காய்கறிகளைக் கொண்டு செய்யப்படுகிறது. ஒவ்வொரு சாலட் மற்றும் சூப்பும் வெவ்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை என்பதால் அனைத்து வயதினரும் பருகலாம். 

எங்களுடைய ரெகுலர் கஸ்டமர் தான் இவர்கள் என பல திரையுலக பிரபலங்களின் பெயர்களையும் பட்டியலிட்டார். நம் உடலில் ஏற்படும் அனைத்து வகையான புது புது நோய்களுக்கும் இங்கு நிச்சயம் தீர்வு உண்டு” என்றும் மனநிறைவுடன் கூறியவர் ”இது என் ஐடியாவாக இருந்தாலும் என் கணவர்தான் முழு பொறுப்பையும் ஏற்று எனக்கு பக்கபலமாய் இருக்கிறார்.

எனக்கு நண்பனாக, ஆலோசகராக, நல்ல துணை என அவரே எனக்கு எல்லாமுமாய் இருப்பது தான் மை சீக்ரெட் ஆப் சக்சஸ்”, என தம்ஸ்அப் காட்டியவரிடம், காபவுட்க்கு (CABOUTU) அர்த்தம் கேட்டால் வி, “கேர் அபௌட் யூ” என்கிறார். நாமும் இந்த க்ரில் ஐட்டம், பர்கர், பீட்ஸா மற்றும் இதர குளிர்பானங்களை தவிர்த்து, அதற்கு செலவிடும் பணத்தை, இவர்கள் வலைதளத்தில் சென்று நமக்கான அக்கௌன்ட் ஓபன் செய்து அதிலுள்ள வாலெட்டில் போட்டு வைத்தால், நம் தேவைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகை ஆரோக்கியத்தை நம் இல்லத்திற்கே கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.  வாசகர்களே டேக் கேர்.

படங்கள் : ஆ.வின்சென்ட் பால்