ஊசிமுனை ஓவியங்கள்



மிரர் வேலைப்பாடுகள்

மிகவும் சிம்பிளாக ஒரே வண்ணத்தில் எடுக்கப்பட்ட சுடிதார் டாப்ஸ் அல்லது சேலையினை நாம் விரும்பும் வடிவங்களில் உள்ள சிறு சிறு கண்ணாடி தகடுகளைக் (Glass pieces) கொண்டு துணியில் ஒட்டி அதைச்சுற்றி வேண்டிய வண்ணத்தில் உள்ள நூலை ஆரி நீடிலைக் கொண்டு விரும்பிய பின்னலில் இணைத்து மெருகூட்டினால் அது பார்ப்பதற்கே அழகான தோற்றத்தை அள்ளித் தந்துவிடும். அதற்கான செய்முறை விளக்கத்தை நமக்காக செய்து காட்டுகிறார் மோகன் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் இயக்குநர் செல்வி மோகன் தலைமையில் அதன் பயிற்சியாளர் அனுராதா.

தேவையான பொருட்கள்
விரும்பிய வண்ணத்தில் சில்க் த்ரெட், ஷரி த்ரெட், பேப்ரிக் கம், விரும்பிய வடிவில் கண்ணாடி தகடுகள், கோல்டன் பீட்ஸ், திலக் குந்தன், கத்தரிக்கோல், ஆரி நீடில், இரும்பு ஸ்டாண்டுடன் வுட்டன் பிரேம், டிசைன் பண்ண தேவையான துணி.

1. தேவையான டிசைனில் பேப்ரிக் கம்மை தடவி கண்ணாடி தகடுகளை ஒட்டி சிறிது நேரம் காய வைக்கவும்.