ப்ரியங்களுடன்...



‘தங்கமும் பெண்களும்’ புள்ளி விவரங்களுடன், விளக்கமான தகவல்களை தந்தது வானவில் சந்தை, நன்றி. மழை வரத் தாமதமாவதால் நீர் தேவை அதிகமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், தண்ணீரின் தனி மதிப்பை உணர்த்துகிறது ‘நீராலானது இவ்வுலகு!’
- எஸ்.வளர்மதி, கொட்டாரம், கன்னியாகுமரி.

‘ராஜசுலோசனா’ பற்றிய கட்டுரை அபாரம். கதாநாயகியாக, நகைச்சுவையாக, வில்லியாக நடித்து அசத்தி இருக்கும் அவர் சகலகலாவல்லிதான்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு, சென்னை-110.

முதன் முதலாக ‘தோழி’யை வாசித்தேன். அப்பப்பா... எவ்வளவு பயனுள்ள செய்திகள் என வியந்தேன்.
- நளினி ராமச்சந்திரன், கோவைப்புதூர், கோயம்புத்தூர்.

ஊசிமுனை ஓவியங்கள் கட்டுரை+படங்கள் அருமை. உடனே செய்து பார்க்கவும் முடிவு செய்துவிட்டேன்.
- அ.முரளிதரன், மதுரை-3.

தங்கமும் பெண்களும் அருமையான கட்டுரை. உண்மையை அழகாக விளக்கியுள்ளார். தங்கமான கட்டுரை. லக்ஷ்மியை மறக்க முடியுமா? அவரின் எழுத்துகள் அப்படி செய்து விட்டன. நினைவே ‘ஜில்’ என்றிருக்கிறது.
- ஜி.ராஜேஸ்வரி, ஆதம்பாக்கம், சென்னை-88.

‘குரல்கள்’ கட்டுரையில் வாசகிகளின் கருத்துகள் ஒவ்வொன்றும் அருமை. இளைஞர்கள் முன் நின்று போராடினால் பூரண மதுவிலக்கு நிச்சயமாக வரும்.
- வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம், சென்னை-64.

‘செல்லுலாய்ட் பெண்கள்’ அந்தக் கால நடிகைகளைப் பற்றியும், அவர்கள் எப்படி சினிமா துறைக்கு வந்தார்கள், அவர்களின் இறுதிக்காலம் ஆகியவற்றை அறிய உதவுகிறது. தேன் துளிகளாய் கதை தந்த லக்ஷ்மி்யை ஞாபகத்திற்கு கொண்டு வந்து விட்டீர்கள்.
- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம், சென்னை-59.

நம் செல்லங்களுக்கான தனி அறைகள் எப்படி இருக்க வேண்டும், அதன் பயன்கள் என்ன என்பதைச் சொல்லி, அசத்தி விட்டார். சி.கே.ஜானு, ஆதிவாசிகளுக்கான மண்ணுரிமை வாங்கித்தர தீவிரமாய் போராடியவர் என அறியும்போது, மனசில் நன்றிப் பூக்கள் மலர்ந்தது.
 - மயிலை கோபி, அசோக் நகர், சென்னை-83.

திறமை, சேவை, சாதனை  என மூன்று தளங்களிலும் கோலோச்சி, பெண் குலத்திற்கு பெருமை சேர்த்த டாக்டர் திரிபுரசுந்தரி என்ற லக்ஷ்மியின் வாழ்க்கை எரியும் மெழுகுவர்த்தியாய் உருகிப் போனதைப் படித்து கண் கலங்கினோம்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

பாலியல் கல்வி பற்றி நல்லதொரு உரையாடல். பிரசவ கால கைடு மினி தொடரேயானாலும் பல விஷயங்கள் அடங்கி உள்ளன.
- ம.மஞ்சுளா பாய், வியாசர்பாடி.