ப்ரியங்களுடன்...



அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

செல்லுலாய்ட் பெண்கள் வரிசை தொடரில் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களைப் பற்றி பா. ஜீவசுந்தரி படைத்திருந்த கட்டுரை அந்த அற்புத நடிகை இன்று நம்மோடு இல்லையே என பெரிதும் வருந்த வைத்திருந்தது.
- வி. கலைச்செல்வி, தோட்டக்குறிச்சி.

பழம்பெரும் மாடர்ன் தியேட்டர்ஸ் பற்றி பல அரிய தகவல்களையும், காணக்  கிடைக்காத புகைப்படங்களையும் தந்து அசத்தியிருக்கிறீர்கள்.
- சுகந்தி நாராயண், வியாசர்பாடி.

சிறுதானிய சிற்றுண்டி தயாரிப்பு குறித்த சமையல் குறிப்புகளடங்கிய இலவச இணைப்பு, அதிகரித்து வரும் சிறுதானிய ஆசைக்கு நல்விருந்திட்டிருந்தது.
- வி. மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.

மாடர்ன் தியேட்டர்ஸ் இன்று இல்லையே... கண்களில் நீர் துளிர்த்தது!
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

சாவித்திரி! அவரது கதையை படித்ததும் நெஞ்சு விம்மியது. அடுத்த இதழுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
- வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம்.

’என்ன எடை அழகே’ வாயிலாக பயன் பெற்றோரின் எண்ண வெளிப்பாடு ஒவ்வொருவருக்கும் உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதை தீவிரப்படுத்தியது.ஐந்தறிவு ஜீவன்கள் மனிதர்களுக்கு பாடம் சொன்ன நிகழ்வு மனிதன் மிருகமாகிக் கொண்டிருக்கிறான் என்பதை வெளிக்காட்டுவதாகவே உள்ளது.
- வள்ளியூர் ஏ.பி.எஸ். ரவீந்திரன், நாகர்கோவில்.

‘மரங்களின் தாய்’  திம்மக்கா செய்துள்ள சாதனைகள் கண்டு நெகிழ்ந்து போனேன். நிறைய விருதுகள் பெற்றிருந்த போதிலும் ‘மரங்களின் தாய்’ பட்டம் சாலப் பொருந்தும். மகேஸ்வரி எழுதியுள்ள என் வீட்டுத் தோட்டத்தில் செய்தி மிகவும் பயனுடையதாயிருந்தது.
- இல. வள்ளிமயில், திருநகர்.

தமிழ்ப் பட உலகில் நேற்றைய பல ஆண்-பெண் சினிமா நட்சத்திரங்கள் ஜொலிக்க முக்கிய காரணமே மாடர்ன் தியேட்டர்ஸ்தான்! அதனை பெருமைப்படுத்திக் கட்டுரை வெளியிட்டிருப்பது தோழியின் பெருமைக்கு ஒரு மகுடம்! புகைப்படக் கலைஞர் காயத்திரியின் இது கேமரா கண் படங்கள் அருமை.
- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரு.

அமிர்தாவின் தவில் இசை நம் காதுகளில் ரீங்காரம் செய்கிறது. அமிர்தவர்ஷினியாய் (இசை) மழைக்கு உகந்த ராகமாய்..!
- மயிலை கோபி, அசோக் நகர்.

வாயில்லா ஜீவராசிகளை வாயுள்ள மருத்துவ ஜீவன்கள் சித்ரவதை செய்து கொன்றது மனதை விட்டு அகலவில்லை. நாயும் குரங்கும் பாசத்தை காட்டியதை மறக்க முடியவில்லை.
- ராஜீ குருஸ்வாமி, ஆதம்பாக்கம்.

அட்டையில்: தமன்னா
படம்: ஜேடி-ஜெர்ரி