ப்ரியங்களுடன்...



ஃபேஷன் உலகத்திற்குள் வெறும் 20 ரூபாயில் சென்று சுற்றிப் பார்த்து வந்த அனுபவத்தைத் தந்தது தோழியின் ஃபேஷன் ஸ்பெஷல்
- பிரதீபா, வள்ளியூர் மற்றும் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்.

ஆழமான கருத்துகளைக் கொண்ட ட்விட்டர் ஸ்பெஷல் சூப்பர்!
- அ.பிரேமா, சென்னை-68.

வாசிப்பை நேசித்து நூலகம் நடத்தும் நடிகை ரஜினி மாதவையா வித்தியாசமானவர்தான்! அவர் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகள்!
  - ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர், சென்னை.

தன் மகனின் ஒவ்வொரு புதிய நிகழ்விலும் மகிழும் ஷீபாவும், தடைகளையும் தடுமாற்றங்களையும் தன்னம்பிக்கையுடன் வென்ற திவ்யாவும்  அப்துல் கலாமின் தாரக மந்திரமான ‘கனவு காணுங்கள் லட்சியத்தைத் தொட்டு விடலாம்’ என்ற கூற்றிற்குப் பொருத்தமானவர்கள்!
- ரஜினி பாலசுப்ரமணியன், சென்னை-91 (மின்னஞ்சலில்)...

‘பெண்கள் வஞ்சிக்கப்படுகிற சமூகம் நல்ல சமூகமாக இருக்காது. அங்கே நல்ல தலைமுறை உருவாகாது’ எனும் சகோதரி வசந்தகுமாரியின்  வார்த்தைகள் மாற்றுக்கருத்துக்கு இடமில்லாதவை.
  - எஸ்.வளர்மதி, கொட்டாரம்.



பெண் என்றால் ஒரு கூட்டுக்குள் அடங்கி இருப்பவள் என்ற எண்ணத்தை உடைத்து இன்று மனித உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும்  பழனியம்மாளின் நெஞ்சுரம், அந்தப் பழனியாண்டியின் வேல் போன்று கூர்மையானது!
- அதிதி கவசம்பட்டு தர், சென்னை-24.

பீர்க்கங்காய்… மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் மற்றும் பெருமைகளை படித்து உணர முடிந்தது. பீர்க்கங்காய் நார், சருமத்தை  சுத்தப்படுத்தும் என்பது பலரும் அறியவேண்டிய தகவல்…
  - பேச்சியம்மாள் மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.

பூமியின் டாப் 10 எல்லைக்கோடுகள் ஒவ்வொன்றும் பிரமிக்க வைப்பதாக இருந்தாலும், முதல் இடத்தில் நம் இந்தியாவின் ‘எவரெஸ்ட்’  இருப்பது நமக்கு பெருமையான விஷயமே!
-  கார்த்திகேயன், சாத்தூர்.

விதவிதமான வெளிநாட்டு சமையல் ரெசிபிகளை பார்த்தபோது மிகவும் வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
  - ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

ஷீபா ராதாமோகனின் இதயத்தின் மொழி அஷ்வத்தின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு!
- பி.கீதா, சென்னை-68.

‘கண்கள் பேசும் கேமரா’ ஃபேஷன் கவிதையாக்கி தரும் அனிதா மூர்த்தி கிரேட்!
- மயிலை கோபி, சென்னை.

சுதந்திர தின அரிய செய்திகளாக ‘இந்தியா சில சுவாரஸ்யங்கள்’ படங்களுடன் தந்தமைக்கு சூப்பர் பாராட்டுகள்!
- தி.பார்வதி, திருச்சி-7.