தேங்க் யூ டியர்!



லஷ்மி பாலகிருஷ்ணன்

பொதுவா சில வார்த்தைகள் சில சமயங்களில் பிரபலமாக இருக்கும். பெரும்பான்மையும் சினிமாக்களின் உபயமாகவே இந்த ட்ரெண்டிங்  இருக்கும். கனிக்கும் அவ்வப்போது சில வார்த்தைகளின் மேல் அலாதி ப்ரியம் பிறந்துவிடும். முன்பெல்லாம் எல்லாவற்றிற்கும் Finished  என்று சொல்லிக் கொண்டு திரிந்தான். பல் தேய்ப்பது, கஷாயம் குடிப்பது போன்ற எரிச்சலூட்டும் விஷயங்களுக்கு அவற்றை நான்  ஆரம்பிப்பதற்கு முன்னரே Finished என்று மங்களம் பாடிவிடுவதும் உண்டு!



இப்போதைய அவரது செல்ல வார்த்தை Thank you dear.  ஒரு முறை எனக்கு தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து தந்தவனைப் பார்த்து நான்  சொன்ன இந்த வார்த்தை, அவனுக்கு ரொம்பப் பிடித்து விட்டது போலும். அவனுக்கு நாம் எது செய்தாலும் தவறாமல் சொல்கிறான். அவன்  நமக்கு எதாவது செய்தாலும் எங்கே நன்றி மறந்து இருந்துவிடப் போகிறோமோ என்ற பதற்றத்தில் நமக்கு நினைவுப்படுத்துவதற்காக ஒரு  முறை Thank you dear என்கிறான். எங்கள் வாழ்வை இவ்வளவு இனிமையாக்கியமைக்கு Thank you dear  :)))