கடன் நல்லது!

மத்திய, மாநில அரசுகள் பயனுள்ள பல கடன் திட்டங்களை வழங்குகின்றன. அவை என்னென்ன, எப்படிப் பெறுவது, தொடர்பு முகவரி... இப்படி எல்லா விவரமும் இப்பகுதியில்!
இது ஒரு மைக்ரோ ஃபைனான்ஸ் திட்டம். முழுக்க முழுக்க ஏழைப் பெண்களுக்கானது. இந்தியாவில் வாழ்வாதாரம் இல்லாத எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் பயன் அடைவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தால் 1993ல் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இது. இதன் கீழ் குறுகிய கால சிறு கடன்களைப் பெறலாம். சிறிய அளவிலான நிலம் வாங்க, அடகு வைத்த நிலத்தை மீட்க, நிலத்தை குத்தகைக்கு எடுக்க கடன் பெறலாம். தோட்டம் போட, தாவரங்கள், பூக்கள், பயிர் வளர்க்க, மேற்படிப்புச் செலவுகளுக்கு, வியாபாரம் செய்ய, பால்பண்ணை வைக்க, எஸ்.டி.டி./பி.சி.ஓ. பூத் அமைக்க, ஊறுகாய் தயாரித்து விற்க, வளையல் கடை, பெட்டிக் கடை வைக்க... உரம், பூச்சி மருந்து வாங்கக்கூட இத்திட்டம் உதவும். மருத்துவச்செலவுகளுக்கும் இத்திட்டத்தில் கடன் பெறலாம். இந்தக் கடனை ‘ராஷ்ட்ரீய மஹிலா கோஷ்’ நியமித்திருக்கும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் அல்லது மாநில அரசு மூலமாகவே பெற முடியும். கடனை சுலபத் தவணைகளாகத் திருப்பிச் செலுத்தலாம். இந்தக் கடனைப் பெறுவதற்கு அருகாமையிலுள்ள தொண்டு நிறுவனங்களையோ, மகளிர் சுய உதவிக் குழுக்களையோ அணுகலாம்! மேலும் விவரங்களுக்கு... Rastriya Mahila Kosh, Minstry of Women and Child Welfare, 1, Abul Fazal Road, Bengali Market, New Delhi 110 001. Ph: 01123354619, 01123354620, 01123354628. Email: ed_rmk@nic.in Website: www.rmk.nic.in
|