தமன்னாவுக்கு பிடித்த டாப் 5 பெண்கள்

ஆன் ஹாதவே என்னோட ஆல்டைம் ஃபேவரைட் நடிகை... ‘ரேச்சல் கெட்டிங் மேரீட்’னு ஒரு படத்தை யதேச்சையா பார்த்தேன். பிரமிச்சுப் போய் அவங்க நடிச்ச அத்தனை பட டி.வி.டியையும் தேடித் தேடி வாங்கிப் பார்த்துக்கிட்டிருக்கேன். நம்ம ஆளுங்கல்லாம் டி.வில முகம் காட்டறதை கவுரவக் குறைச்சலா பேசிட்டிருந்த காலத்துலயே, ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் டி.வின்னு பிஸியா கலக்கிட்டிருந்தவங்க. அழகான, அறிவான நடிகை... என்னைப் போலவே!
இந்திரா காந்தி நான் பிறக்கறதுக்கு முன்னாடியே அவங்க இறந்துட்டாங்க. டி.விலயும் புக்ஸ்லயும்தான் அவங்களைப் பார்த்துத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. அவங்களோட மிடுக்கும் கம்பீரமும் வேற யாருக்கும் வராது.
கிரண் பேடி ‘நடிக்க வராட்டா என்னவாகியிருப்பீங்க’ன்னு என்கிட்ட யாராவது கேட்டா, ‘போலீஸ்’னு சொல்ல மாட்டேன். ‘கிரண் பேடி’ன்னு சொல்வேன். அவங்களோட வாழ்க்கையைப் பத்திப் பேசற ‘ ஐ டேர்’ புத்தகம் படிச்ச பிறகு அவங்க மேல உள்ள மரியாதையும் அபிமானமும் பல மடங்கு அதிகமாச்சு. நீங்களும் உடனே படிங்க...
மாதுரி தீட்சித் மாதுரி தீட்சித்தை ஏன் பிடிக்கும்னா, எனக்கு காரணம் சொல்லத் தெரியாது. அழகு, நடிப்பு, ஆளுமைன்னு எல்லாமே அவ்ளோ பிடிக்கும். மேடம் மறுபடி நடிக்கிறாங்களாமே... நானும் பாலிவுட்ல படம் பண்ணிட்டிருக்கேன். அவங்ககூட ஒரு படம் பண்ணணும்னு ஆசை... அதிர்ஷ்டம் இருக்கான்னு பார்ப்போம்!
அன்னை தெரசா ‘அன்பு இருக்கிற இடம்தான் அழகானது’ங்கிறது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படிப் பார்த்தா, தெரசாவோட அன்புக்குப் பக்கத்துலகூட யாராலயும் நிக்க முடியாது. ‘நீங்கள் செல்லுமிடத்தில் எல்லாம் அன்பைப் பரப்புங்கள்’னு சொன்ன அவங்களோட வார்த்தைகள் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்!
|