செப்டம்பர் மாதராசி பலன்



செல்வ வளம் சிறக்கும் மாதம் இது! ஆற்றல் அதிகரிக்கும். காரியத்தடை நீங்கும். திருமணமாகாதோருக்குத் திருமணம் கைகூடும். வியாழன், வெள்ளிக் கிழமைகளும், 3, 6, 8, 12, 15, 21, 24, 30 தேதிகளும் அதிர்ஷ்டம் தரும் தினங்கள். 10ம் தேதி முதல் புதன் கிழமைகளும், 14, 23 தேதிகளும் அதிர்ஷ்டமானவை. 17ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளும் 19, 28 தேதிகளும் லாபகரமானவை. செவ்வாய் அன்று துர்க்கையையும். 7, 16, 25 தேதிகளில் விநாயகரையும் வணங்கினால் வாழ்வு சிறக்கும். சந்திராஷ்டம நாட்கள்: 20ம் தேதி மாலை 4:00 மணி முதல் 22ம் தேதி இரவு 6:38 மணி வரை கவனமாகச் செயல்படவும். சந்திர அனுகூல தினங்கள்: 1, 4ம் தேதி காலை 10:57 மணி முதல் 5, 6, 9, 10, 11ம் தேதி இரவு 8:30 வரை, 16, 17, 18, 19, 20ம் தேதி மாலை 4:00 மணி வரை, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் மற்ற கிரகங்களின் பாதிப்பு இருக்காது.



பொருள் வரவு தாராளமாக இருக்கும் மாதம் இது! பயமும் விரோதமும் விலகும். சிலருக்குப் பதவியும், சிலருக்குப் பதவி உயர்வும் கிடைக்கும். சிலருக்கு விவாகம் கூடிவரும். 5, 6, 9, 15, 18, 24, 27 ஆகிய தேதிகளும், வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளும் சாதகமாகும். 12ம் தேதி முதல் சனிக்கிழமைகளும், 17, 26 தேதிகளும் ராசியான தினங்கள். வியாழக்கிழமைகளில் குருவையும், 7, 16, 25 தேதிகளில் கணபதியையும், 4, 13, 22 தேதிகளில் துர்க்கையையும் வணங்கினால் பண விரயமும் தொழிலில் சிக்கலும் வராது. சந்திராஷ்டம நாட்கள்: 22ம் தேதி இரவு 6:38 மணி முதல் 24ம் தேதி இரவு 9:45 மணி வரை எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும். சந்திர அனுகூல தினங்கள்: 1, 2, 3, 4ம் தேதி காலை 10:57 மணி வரை, 7, 8, 12, 13, 19, 20, 21, 22ம் தேதி இரவு 6:37 மணி வரை, 28, 29, 30 ஆகிய தேதிகளில் சந்திரனால் நன்மைகள் நடக்கும்.

ஆனந்தம் ததும்பும் மாதம் இது! பணவரவும் லாபமும் கட்டாயம் உண்டு. காதல் கைகூடும். சிலருக்குப் புதுவேலை கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். வெள்ளிக்
கிழமைகளும், 4, 6, 13, 15, 22, 24, 27 தேதிகளும் லாபம் தருபவை. 1ம் தேதியிலிருந்து 16ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளும், 1, 10 தேதிகளும் சாதகமானவை. 10ம் தேதி முதல் 26ம் தேதி வரை புதன்கிழமைகளும் 14, 23 தேதிகளும் அதிர்ஷ்ட தினங்கள். சனிக்கிழமைகளில் சனீஸ்வரர், விக்னேஸ்வரரையும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியையும் வணங்கினால் நலமாகும். சந்திராஷ்டம நாட்கள்: 24ம் தேதி இரவு 9:45 மணி முதல் 26ம் தேதி இரவு 2:15 மணி வரை. சந்திர அனுகூல தினங்கள்: 2, 3, 5, 9ம் தேதி காலை 9:00 மணி முதல் 11ம் தேதி இரவு 8:30 மணி வரை, 14, 15, 20ம் தேதி மாலை 3:51 மணி முதல் 24ம் தேதி இரவு 9:44 மணி வரை, 29ம் தேதி காலை 9:10 முதல் 30ம் தேதி முடிய.

நினைத்தது நடக்கும் மாதம் இது! சிலருக்குப் பதவி உயர்வு, பதவி மாற்றமும் கிடைக்கும். வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. பறிகொடுத்தவை திரும்பக் கிடைக்கும். சிலருக்குத் திருமணம் முடிவாகும். வியாழன், வெள்ளிக்கிழமைகளும் 3, 6, 7, 8, 12, 15, 16, 21, 24, 25, 30 தேதிகளும் வீடு வாங்கவும், புதுத்தொழில் தொடங்கவும் ஏற்றவை. 17ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளும், 19, 28 தேதிகளும் சிறப்பானவை. செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் புதன்கிழமைகளில் பெருமாளையும் வழிபடுங்கள். சந்திராஷ்டம நாட்கள்: 1ம் தேதி அதிகாலை முதல் நள்ளிரவு 1:40 மணி வரை, 26ம் தேதி இரவு 2:15 மணி முதல் 29ம் தேதி காலை 9:10 மணி வரை விழிப்புடன் செயல்படவும். சந்திர அனுகூல தினங்கள்: 4ம் தேதி காலை 10:57 மணி முதல் 8ம் தேதி முடிய, 13, 16ம் தேதி காலை 10:00 மணி முதல் 18ம் தேதி மதியம் 1:30 மணி வரை மற்றும் 23, 24, 25, 26 தேதிகள் வரை.


பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் மாதம் இது! அதிகாரம் நிறைந்த பதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டு. வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளும் 6, 9, 15, 18, 24 தேதிகளும் அதிர்ஷ்ட தினங்கள். 12ம் தேதி முதல் சனியும் வக்ர நிவர்த்தியாவதால் பகைவர் பயம் இருக்காது. அன்று முதல் சனிக்கிழமைகளும், 17, 26 தேதிகளும் சாதகமானவை. வியாழக்கிழமைகளில் குருவையும், 7, 16, 25 தேதிகளில் விக்னேஸ்வரரையும், புதன்கிழமைகளில் பெருமாளையும் வணங்கினால் நன்மையாகும். சந்திராஷ்டம நாட்கள்: 1ம் தேதி நள்ளிரவு 1:40 மணி முதல் 4ம் தேதி காலை 10:57 மணி வரை, 29ம் தேதி காலை 9:10 மணி முதல் 30ம் தேதி முடிய எதிலும் கவனம் தேவை. சந்திர அனுகூல தினங்கள்: 1, 7, 8, 9, 10, 11ம் தேதி இரவு 8:00 மணி வரை, 14, 18ம் தேதி மதியம் 1:30 மணி முதல் 20ம் தேதி மாலை 4:00 மணி வரை, 25, 26, 27, 28 தேதிகள் வரை.


ஆற்றல் பெருகும் மாதம் இது! அதிகார பதவி கிடைக்கும். சிலருக்கு வீடு, நிலம் வாங்கும் வாய்ப்பு உண்டு. திருமணம் கூடிவரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பணவரவு சிறப்பாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். நண்பர்களோடு விழா, விருந்துகளில் பங்கெடுத்துக் கொள்வீர்கள். வியாழன், வெள்ளிக்கிழமைகளும் 3, 4, 6, 12, 13, 15, 21, 22, 24, 30 தேதிகளும் அதிர்ஷ்டமான தினங்கள். பண விரயம் ஏற்படாமலிருக்க, சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்க சனிக்கிழமைகளில் சனீஸ்வரர், கணேசரையும், புதன்கிழமைகளில் பெருமாளையும், செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் வணங்கவும். சந்திராஷ்டம நாட்கள்: 4ம் தேதி காலை 10:57 மணி முதல் 6ம் தேதி இரவு 9:40 மணி வரை கவனத்தோடு செயல்படவும். சந்திர அனுகூல தினங்கள்: 1, 2, 3, 9ம் தேதி காலை 9:30 மணி முதல் 13ம் தேதி முடிய, 16ம் தேதி காலை 10:05 மணி முதல் 18ம் தேதி மதியம் 1:30 மணி வரை, 20ம் தேதி மாலை 3:30 மணி முதல் 22ம் தேதி வரை, 27, 28, 29, 30 தேதிகள் வரை.


மதிப்பும் மரியாதையும் உயரும் மாதம் இது! சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு வேலை கிடைக்கும். பணவரவு உண்டு. சிலர் பிள்ளைகளால் லாபம் அடைவார்கள். 9ம் தேதி வரை புதன் கிழமைகளும், 1, 5, 10, 19, 28 தேதிகளும் அதிர்ஷ்ட தினங்கள். ஞாயிற்றுக்கிழமைகள் கலைத்துறைப் பெண்களுக்கு சாதக தினங்கள். வெள்ளிக்கிழமைகளில் திருமகளையும், சனிக்
கிழமைகளில் சனீஸ்வரர், விநாயகரையும், செவ்வாய்க்கிழமைகளில் மாரியம்மனையும் வணங்கினால் பண விரயமும், சண்டை, சச்சரவுகளும், மன உளைச்சலும் ஏற்படாது. சந்திராஷ்டம நாட்கள்: 6ம் தேதி இரவு 9:40 மணி முதல் 9ம் தேதி காலை 9:30 மணி வரை எச்சரிக்கையுடன் செயல்படவும். சந்திர அனுகூல தினங்கள்: 2, 3, 4, 5, 6, 12, 13, 14, 15, 18ம் தேதி மதியம் 1:30 மணி முதல் 19, 20ம் தேதி மாலை 4:00 மணி வரை, 23, 24, 29, 30 தேதிகளில் சந்திரனால் நன்மைகள் நடக்கும்.

திட்டமிட்டபடி காரியங்கள் நிறைவேறும் மாதம் இது! காத்திருக்கும் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். தொழிலாளர் பிரச்னை தீரும். சிலருக்கு வீடு கட்டும் வாய்ப்பு இருக்கிறது. பொருளாதார நிலை மேன்மையடையும். சிலர் பணி மாற்றம் பெறுவார்கள். 1, 3, 5, 6, 8, 10, 12, 14, 15, 19, 21, 23, 24, 28, 30 தேதிகளும், ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளும் அதிர்ஷ்டமான தினங்கள். செவ்வாய்க்கிழமைகளில் பத்ரகாளியையும், 7, 16, 25 தேதிகளில் விக்னேஸ்வரரையும் வலம் வந்து வணங்கினால் கஷ்டங்களோ இழப்புகளோ ஏற்படாது. 12ம் தேதி முதல் சனீஸ்வரரையும் வணங்க வேண்டும். சந்திராஷ்டம நாட்கள்: 9ம் தேதி காலை 9:30 மணி முதல் 11ம் தேதி இரவு 8:30 மணி வரை எதிலும் கவனமாகச் செயல்படவும். சந்திர அனுகூல தினங்கள்: 7, 8, 16, 17, 18ம் தேதி மதியம் 1:30 மணி வரை, 20ம் தேதி மாலை 3:55 மணி முதல் 22ம் தேதி இரவு 6:38 மணி வரை, 25, 26 ஆகிய தேதிகள் வரை.


செழிப்போடும் செல்வாக்கோடும் இருக்கும் மாதம் இது! சிலரது காதல், திருமணமாகக் கைகூடும். சிலருக்கு சொத்து கிடைக்கும். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளும், 6, 7, 9, 15, 16, 18, 24, 25 தேதிகளும் அனுகூலமான பலன்களைத் தரும் தினங்கள். 10ம் தேதி முதல் புதன்கிழமைகளும், 14, 23 தேதிகளும் எழுத்து, கலைத்துறையினருக்கு ஏற்றம் தருபவை. 12ம் தேதி முதல் சனிக்கிழமைகளும், 17, 26 தேதிகளும் தொழிலதிபர்களுக்கு சாதகமானவை. 17ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளும் 19, 28 தேதிகளும் அதிர்ஷ்ட தினங்கள். வியாழக்கிழமைகளில் குருவையும், 4, 13, 22, 27 தேதிகளில் துர்க்கையையும் வழிபடுங்கள். சந்திராஷ்டம நாட்கள்: 11ம் தேதி இரவு 8:30 மணி முதல் 14ம் தேதி அதிகாலை 4:21 மணி வரை எச்சரிக்கை தேவை. சந்திர அனுகூல தினங்கள்: 1, 8, 9, 10, 11ம் தேதி இரவு 8:29 மணி வரை, 18ம் தேதி மதியம் 1:30 மணி முதல் 20ம் தேதி 3:55 மணி வரை.


எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் மாதம் இது! சிலருக்கு வாகனம் வாங்கும் வாய்ப்பு இருக்கிறது. சிலர் ஆடை, ஆபரணம் வாங்குவார்கள். தடைபட்டிருந்த வீட்டுவேலை தொடரும். பணவரவு உண்டு. வியாழக்கிழமைகளும், 3, 4, 5, 12, 13, 21, 22, 30 தேதிகளும் சிறப்பான நாட்கள். சுபகாரியங்களுக்கு, சொத்து வாங்க ஏற்றவை. சனிக்கிழமைகளில் சனீஸ்வரர், கணேசரை வணங்கினால் பண விரயமும், பிள்ளைகளால் பிரச்னையும் ஏற்படாது. வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனையும், ஞாயிற்றுக்கிழமைகளில் ஈசனையும் வழிபட்டால் மனக்குழப்பம் தீரும். சந்திராஷ்டம நாட்கள்: 14ம் தேதி அதிகாலை 4:21 மணி முதல் 16ம் தேதி காலை 10:05 மணி வரை எதிலும் கவனம் தேவை. சந்திர அனுகூல தினங்கள்: 2, 3, 9ம் தேதி காலை 9:30 மணி முதல் 13ம் தேதி வரை, 18ம் தேதி மதியம் 1:30 மணி முதல் 22ம் தேதி வரை, 25, 26, 29, 30 தேதிகளில் நல்ல பலன்களே!


புகழும் பாராட்டும் சேரும் மாதம் இது! 10ம் தேதி முதல் காரியத்தடைகள் நீங்கும். பணவரவு அதிகமாகும். பாத்திர வியாபாரம் செய்யும் பெண்கள், சுயதொழில் செய்யும் பெண்களுக்கு லாபம் கிடைக்கும். 10ம் தேதி முதல் புதன்கிழமைகளும் 14, 23 தேதிகளும் அதிர்ஷ்டமான தினங்கள். 4, 13, 22 தேதிகள் சுமாரான தினங்கள். தொழிலில் பிரச்னை வராமலிருக்க குருவையும், பணம், பொருள் விரயத்தைத் தடுக்க சனீஸ்வரர், கணேசரையும் வழிபட வேண்டும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்க செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வலம் வந்து வணங்கவும். சந்திராஷ்டம நாட்கள்: 16ம் தேதி காலை 10:05 மணி முதல் 18ம் தேதி மதியம் 1:30 மணி வரை எச்சரிக்கையோடு செயல்படவும். சந்திர அனுகூல தினங்கள்: 1, 4ம் தேதி காலை 10:57 மணி முதல் 5, 6ம் தேதிகள், 12, 13, 14, 15, 20ம் தேதி மாலை 3:55 மணி முதல் 24ம் தேதி வரை, 27, 28 தேதிகளில் சந்திரனால் நன்மைகள் நடக்கும்.


உதவி கிடைக்கும் மாதம் இது! பெரியோர் ஆசியும் கிடைக்கும். பணவரவு உண்டு. பகைமை ஒழியும். நோய் அண்டாது. சிலருக்குப் பதவியும், சிலருக்குப் பதவி உயர்வும் கிடைக்கும். சனிக்கிழமைகளில் சனி பகவானையும், செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், வியாழக்கிழமைகளில் குருவையும் வழிபட்டால் பணத்துக்கும் கௌரவத்துக்கும் குறைவு இருக்காது. வெள்ளிக்கிழமைகளும், 5, 6, 7, 15, 16, 24, 25 தேதிகளும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் தினங்கள். 16ம் தேதிவரை ஞாயிற்றுக்கிழமைகளும், 1, 10 தேதிகளும் புதுத் தொழில் தொடங்க ஏற்ற தினங்கள். சந்திராஷ்டம நாட்கள்: 18ம் தேதி மதியம் 1:30 மணி முதல் 20ம் தேதி மாலை 4:00 மணி வரை எச்சரிக்கையுடன் செயல்படவும். சந்திர அனுகூல தினங்கள்: 2, 3, 4ம் தேதி காலை 10:57 மணி வரை, 8, 9ம் தேதி காலை 9:30 மணி வரை, 14, 15, 16, 17, 18ம் தேதி மதியம் 1:30 மணி வரை, 23 ,26, 29, 30 தேதிகளில் மற்ற கிரகங்களின் பாதிப்பு இல்லை.