பிரியங்களுடன்...



குங்குமம் தோழி அப்பா-பெண் சிறப்பிதழ் மிகவும் அருமையாக உள்ளது. நெகிழச் செய்தது. என் அப்பாவின் நினைவு வந்தது.  
- வித்யா சுப்ரமணியம் (ஃபேஸ்புக்கில்)... மற்றும் பி.கவிபாலா, பொள்ளாச்சி.

குங்குமம் தோழியின் அத்தனை படைப்புகளும் வித்தியாசமான, வியக்க வைக்கும் செய்திகள்!
- கிருஷ்ணகுமாரி சுவாமிநாதன் (ஃபேஸ்புக்கில்)...

தந்தையர் குலத்துக்குச் சிறப்புச் செய்த ‘தந்தையர் தின சிறப்பிதழ்’ சிறப்போ சிறப்பு! ஒரு தந்தை என்கிற முறையில் பாராட்டி மகிழ்கிறேன்!
- கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு-43.

ளிறிளிஷி  என்றால் என்ன என தெளிவாகச் சொல்லி ரெசிபிகளையும் கொடுத்திருப்பது பயனுள்ள பொக்கிஷம்.
- சு.சிநேஹபிரியா, சென்னை-23 மற்றும் லஷ்மி சீனிவாசன், சென்னை-24.

ஜோடி ஜோடியாக அப்பா - பொண்ணு புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் ஆழ்மனது நேசத்தையும் எடுத்துக் காட்டி மெருகூட்டிவிட்டீர்கள்.
- கீதா பிரேமானந்த், சென்னை-68 மற்றும் வி.வெற்றிச்செல்வி, வேதாரண்யம் (மின்னஞ்சலில்)...

அப்பா - மகள் பகுதி அனைத்துமே மனதைத் தொட்டன. ‘தோட்டக்கலை சிகிச்சை’ அதிசய உண்மை.
- ரஜினி பாலா, சென்னை-91 (மின்னஞ்சலில்)...

மூன்று தலைமுறையாக ஓவியத் துறையில் சாதனை புரிந்து வரும் மணியம் செல்வனின் குடும்பம் இறைவன் கொடுத்த வரம்.
 பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

தந்தை ‘நல்லி’ குப்புசாமி, மகள் ஜெயஸ்ரீ இருவரும் பட்டு உலகில் தனித்தன்மை பெற்று விளங்குவது சிறப்பு. சிறைக் கைதியின் மகளின் கல்விச் செலவை 4 ஆண்டுகளாக வழங்கி வந்த ‘நல்லி’ குப்புசாமியின் சேவை மனப்பான்மை போற்றத்தக்கது.
- சுப்புலெட்சுமி பாலகிருஷ்ணன், கோவில்பட்டி-1 மற்றும் அ.பிரேமா, சென்னை-68.

இரண்டு மகன்களுக்கு அழகான அப்பாவாக மட்டுமில்லாமல், யதார்த்தமான அப்பாவாகவும் பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார் நடிகர் ஜெயபிரகாஷ்.           - ஜே.தனலட்சுமி, சென்னை-12.
ஆச்சரிய அப்பாக்கள் பற்றிய உண்மைகளும் செய்திகளும் படிக்கப் படிக்க பரவசம்!
- இ.டி.ஹேமமாலினி, சென்னை-23 மற்றும் எஸ்.வளர்மதி, கொட்டாரம்.

‘ஹெல்த்’ பகுதியில் தொப்பை வராமல் இருப்பதற்குக் கொடுத்திருக்கும் வழிமுறைகள் அருமை. ‘சீக்ரெட் கிச்சன்’ பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்முறை அசத்தல்! எப்படித்தான் இதையெல்லாம் கண்டுபிடிக்கிறீர்களோ!
- பி.கவிதா நரசிம்மன், சர்க்கார்பதி., கீதா பகவதி, சென்னை-12.,

ரமா ஆனந்த், திருச்சி-6 மற்றும் வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்.
மனசு காவலா? மதில் காவலா? அது போல ‘மனவேலியை உறுதியாக அமைத்துக் கொண்டுவிட்டால் உள்ளே பூத்து மலர்கிற உறவுகள் பாதுகாப்பாக, பத்திரமாக இருக்கும்’ என்ற டாக்டர் சுபா சார்லஸின் வார்த்தைகள் நம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியவை.
- வரலெஷ்மி முத்துசாமி, சென்னை-37

சமூகத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய இன்றுவரை போராடும் ‘பூமித்தாய்’
கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் பெண் இனத்துக்கே பெருமிதம் சேர்ப்பவர்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை மற்றும் ப்ரீத்தா ரங்கசாமி, சென்னை-4 (மின்னஞ்சலில்)...

‘ஆரோக்கியப் பெட்டகம்’ பகுதியில் வெளியான குடைமிளகாயின் மருத்துவ மகிமைகளும்  அதில் செய்யப்படும் ரெசிபிகளும் பெரிதும் கவர்ந்தன.
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18

மற்றும் வி.வெற்றிச்செல்வி, வேதாரண்யம், (மின்னஞ்சலில்)...
‘ஒளிகாட்டி’ பகுதியில் வெளியாகியிருக்கும் ‘நீரின்றி நாமில்லை’ கட்டுரை நீராதாரம் குறைந்து வரும் இன்றைய காலகட்டத்துக்கேற்ப நீரின் அருமை, பெருமைகளை உணர்த்தியது.
- கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.

பெண்களுக்கான உரிமைகளைப் பட்டியலிட்டு, ‘சட்டம் உன் கையில்’ பகுதியில் வழக்கறிஞர்ஆதிலட்சுமி லோகமூர்த்தி சொல்லும் கருத்துகளும் சட்டங்களும் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டியவை.
 சுகந்தா ராம், சென்னை-59.