உள்ளம் கேட்குமே more



மகிழ்ச்சி என்பது யாதெனில்...

கிராமத்து ரயில் பாலத்தின்
அடியில் அமர்ந்த வண்ணம் ‘ஓ’வெனக் கத்தி ஆர்ப்பரிப்பது!
-சுந்தரி விஸ்வநாதன்

காலை முதல் மாலை வரை வேலை செய்துவிட்டு, பனியி லும் குளிரிலும் வீடு திரும்பும் போது கணவர் எப்போதாவது மனமிரங்கிப் போட்டுத் தரும் சூடான இஞ்சி டீ!
-வாணி மல்லிகை

விடுமுறை நாளான வெள்ளிக்
கிழமையன்று கணவரோடும்
குழந்தைகளோடும் மிக மகிழ்ச்சி
யாகப் பொழுதினைக் கழிப்பது!
 கீதாலட்சுமி எத்திராஜ்

பேரனுக்குக் கொடுக்கும் காலைக் குளியல்!
-விசாலி ஸ்ரீராம்

என் 9 மாதப் பேத்தி சஹானா தாவித் தாவி தவழ்ந்து வந்து, ‘பாத்த்தீ’ என்று காலைக் கட்டிக்கொண்டு அண்ணாந்து பார்க்கும்போது வருவது!
- உஷா ராமானுஜம்

கதை எழுதுவதும், கதைகளைப் படிப்பதுவும்,
பின் அதனைத்
தோழிகளுடன்
அக்கு வேறு
ஆணிவேறாக
அலசுவதும்!
ஷெண்பா பாலசந்திரன்

பழமையான கோயில்களில் உள்ள நல்ல அதிர்வுகள் மகிழ்ச்சி தரும்!
- ஷோபா ராம்ஜி

படிக்கட்டில் அமர்ந்த படி செல்லும் ரயில் பயணம்!
- சுஜாதா செல்வராஜ்

தூர தேசம் போன மகன் நெடிய விடுமுறையில் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு முறையும் அளவற்ற மகிழ்ச்சிதான் எனக்கு!
- தீபமணி உலகநாதன்

தொகுப்பு: அன்னபூரணி நாராயணன்