உலகின் டாப் 10 அழகிய வனங்கள்



‘வானத்தை மரங்களன்றோ தாங்கிப் பிடிக்கின்றன. வனங்கள் மறைந்தால் உலகத்தின் கூரையான வானம் இடிந்து வீழும். அப்போது இயற்கையும் மனிதனும் இணைந்தே வீழ்வர்...” - இது ஒரு பழங்குடிப் பாடல்.

வனமின்றி வாழ்வில்லை என்பதையே நம் முன்னோர் தொடர்ச்சியாக பல்வேறு முறைகளில் சுட்டிக் காட்டுகின்றனர். வனம் என்கிற அடவி என்கிற காடு என்கிற கானகம் அதன் இன்றியமையாத தன்மையைத் தாண்டி, கணக்கிலடங்கா ரகசிய வசீகரங்களை தன்னுள் அடக்கியுள்ளது. அப்படி, பூவுலகின் வனங்களை அழகு வரிசைப்படுத்தியதில் கிடைத்த பட்டியல் இது!

Amazon Rainforest (South America)

கிட்டத்தட்ட 21 லட்சம் சதுர மைல் பரப்பளவுடன், 9 நாடுகளில் விஸ்தாரமாக எல்லை கொண்டுள்ள மழைக்காடு இது. 60% பிரேசிலிலும், எஞ்சிய பகுதி பொலிவியா, பெரு, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளிலும் பரந்து விரிந்துள்ள இந்தக் காட்டில் அறியா மூலிகைகளும் இன்னும் காலடி படாத இடங்களும் ஏராளம்!

Olympic National Forest, Washington, United States

வாஷிங்டன் பகுதியில் உள்ள இந்த மழைக்காடு அமெரிக்காவின் ஈரப்பதம் மிகுந்த பகுதி என்று அழைக்கப்படுகிறது.

Daintree Rainforest (Australia )

உலகின் மிகப்பழைய வெப்பமண்டல மழைக்காடு இதுதான். 110 மில்லியன் ஆண்டு வரலாறு கொண்ட இக்காடு, கங்காரு உள்பட பல விலங்குகளின் புகலிடம்.