ஆன்டியாக்சிடண்டுகளின் கூட்டு ஆற்றல்



உடல் மொழி ரகசியங்கள் 27

ஆன்டியாக்சிடண்டுகள்பலவகை என்றாலும், அவை ஒன்றோடு ஒன்று முரண்படுவது  இல்லை. ஒத்த பண்போடு இணைந்தே செயல்படுகின்றன. ஒன்றுக்கொன்று உதவியாகவும், ஒன்று மற்றொன்றை வலுவூட்டியும் இணைந்து செயல்படுகின்றன. இவ்வாறு இணைந்து செயல்படும் போது அவற்றின் தனி ஆற்றல் அதிகரிக்கிறது.

இதுவே ஒன்றுகூடி இணைந்து செயல்படுவதை ‘சினெர்ஜி’ என்று விஞ்ஞானிகள்கூறுவர். ஆன்டியாக்சி டண்டுகள் தனித்து செயல்படும்போது அதனதன் ஆற்றலை கூடிச் செயல்படும் போது ஒவ்வொன்றின் ஆற்றலும் பெருகி விடுகிறது.

டாக்டர் லெஸ்டெர் பாக்கெர்-பெர்கிலே, கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆராய்ச்சி நிலைய இயக்குநர், ஆன்டியாக்சிடண்டுகள் இணைந்து செயல்படுவதை  ‘இணையம் ஆன்டியாக்சிடண்ட்’ என்று விளக்கமளித்துள்ளார். அதாவது, இவர் நடத்தியுள்ளஆன்டியாக்சிடண்டுகள் ஆராய்ச்சிகளில் 5-வெவ்வேறு வகை ஆன்டியாக்சிடண்டுகள், ஒத்த பண்புகளோடு இணைந்து ஃபிரிரேடிகல்களை அழிக்கின்றன.

மேலும் ஃபிரிரேடிகல் போராட்டத்தில் ஆன்டியாக்சிடண்ட் ஒன்று செயலிழந்து வீழ்ந்து விட்டால்  மற்றொரு  இணையம் ஆன்டியாக்சிடண்ட், எலெக்ட்ரான் ஒன்றை அதற்கு  வழங்கி புதுப்பித்து அதை மறுபடியும் ஃபிரிரேடிகல் போராட்டத்தில் ஈடுபடச்  செய்கிறது.
டாக்டர்  லெஸ்டெர்  பாக்கரின்  இந்த  இணையம் ‘ஆன்டியாக்சிடண்ட்’ அரிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியாளர்களை  இது  ெதாடர்பான  ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது.

டாக்டர் லெஸ்டெர் பாக்கர்  கண்டுபிடித்துள்ள இணையம் ஆன்டியாக்சிடண்டுகள் : வைட்டமின் சி, வைட்ட மின்இ, ஆல்பா - லிபோயிக் அமிலம், குளுதாதியான்,கோ-என்சைம் Q10 அகியவை ஆகும். 

வைட்டமின் இ: உடலில் கொழுப்பில் கரையும் ஆன்டியாக்சி டண்டுகளில் முக்கியமானது வைட்டமின் இ. வைட்டமின் இ  கொழுப்புஅடர்ந்த செல் மேலுறையில் செயல்பட்டு மேலுறையை ஃபிரிரேடிகல் சிதைவுகளில் இருந்து பாதுகாக்கிறது.

வைட்டமின் இ சத்து, இதயநோய் - அல்செய்மர்ஸ் - சிலவகை புற்று ஆகிய நோய்கள் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கிறது. மூட்டு அழற்சி நோய் வலியைக் குறைக்கிறது.  வைட்டமின் இ செல் கட்டமைப்பு மற்றும் டிஎன்ஏ, ஃபிரிரேடிகல் சிதைவுகளைதடுக்கிறது. கேடு செய்யும் மரபணுவைத்  தடுக்கிறது.

100 ஆண்டுகளுக்கு  முன், ஆராய்ச்சியாளர்களும்  மருத்துவர்களும் வைட்டமின் இ யின் மருத்துவ சிறப்புகளை உணரவில்லை.கொறித்து  உண்ணும் விலங்குகள்  கருத்தரிப்புகளுக்கு  மட்டுமே  பயன்படும் சத்து  இது என்றே கருதினர்.

1940ஆம் ஆண்டு வாக்கில் வைட்டமின் இ சத்தை மருத்துவத்துக்குப்பயன்படுத்துவது தொடங்கியது. டாக்டர்  ஈவன் ஷட் மற்றும் அவர் நண்பர்களான லண்டன் மற்றும் கனடா நாட்டு மருத்துவர்கள் பெண்களின் பாலுறுப்பு நோய்களுக்கு வைட்டமின்இ சத்து மருத்துவம் மூலம் நோய்களைக் குணப்படுத்தி வெற்றி பெற்றனர். 
  
1960 ஆம் ஆண்டுவரை மருத்துவத்துறையினரால் கருதப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருந்து வைட்டமின் இ.  அடுத்த ஆண்டு முதல் வைட்டமின் இயின் மருத்துவச் சிறப்பை உணரத் தொடங்கினர்.

ஃபிரிரேடிகல்கள் தாக்குதல்களால் ஆக்சிடேசன் மாற்றமடைந்து சிதையும் செல்மேலுறையை  வைட்டமின்இ சத்து தடுத்து பாதுகாப்பதை அறிந்தனர். உடல் நலத்துக்குவைட்டமின் இ சத்து இன்றியமையா ஊட்டச்சத்து என்பதை உணர்ந்து, அதை பரவலாகப பயன்படுத்தத் தொடங்கினர்.

வைட்டமின் இ உயிர்ச்சத்தின் மருத்துவத் திறன் எல்லாராலும் பாராட்டப்படுகிறது. வைட்டமின் இ சத்து, அதன் ஆன்டியாக்சிடண்டு மருத்துவத்திறனால் ஃபிரிரேடிகல் தாக்குதல்களால் - ‘LDL’ கொலஸ்டிரால் ‘ஆக்சி டேசன்’  மாற்றம்   அடைந்து ஒட்டும் பொருளாகி தமனி இரத்தக்  குழாய்களில் படியத் தொடங்குகிறது. இதுவே இதயநோயின் தொடக்கம்.

வைட்டமின் இ சத்து ஃபிரிரேடிகல்களை முடக்கி செயலிழக்கச் செய்வதன் மூலம் இதயத்தைப் பாதுகாக்கிறது. ஃபிரிரேடிகல்கள்தாக்குதல்களால் ‘LDL’ கொலஸ்டிராலின் நுண் உருண்டை வடிவம் ஆக்சிடேசன் மாற்றம் அடைகிறது. அதனால், அது பதில்வினையாக அழற்சியைத் தூண்டிவிடுகிறது.

அழற்சியால் உருவாகும் நோய் எதிர்ப்பு இயக்கம் வெள்ளை ரத்தச் செல்கள் ஆக்சிடேசன் மாற்றம் பெற்ற ‘LDL’ கொலஸ்டிரால் நுண்உருண்டைகளை விழுங்குகின்றன. இதன் விளைவாக அவை தமனி ரத்தக்  குழாய்  சுவர்களில்  படியாக  ஒட்டத்  தொடங்கி  நாளடைவில் ரத்தஓட்டத்  தடை கட்டியை உருவாக்கிவிடுகிறது.

இவ்வாறு உருவாகும் தமனி ரத்த ஓட்டத் தடை கட்டி ‘மாரடைப்பு’ தாக்கும் வாய்ப்பின் முதல் கட்ட மாற்றம்... இத்தகைய LDL மாற்றங்களால்,  அழற்சி மேலும் பெருகிவிடுகிறது... ‘LDL’ கெட்ட கொலஸ்டிரால் என்று பெயர் சூட்டியுள்ளனர். இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு... ‘LDL’ கொலஸ்டிரால் பயன்பாடுகள் பல.

(ரகசியம் அறிவோம்)