ஜப்பானின் தேனீ விமானம்!



நெட்ஃபிளிக்ஸ் தொடரில் வரும் தேனீ விமானங்களைப்போலவே ஜப்பான் நாடு ரகசியமாக ட்ரோன்களை தயாரித்து வருகிறதாம். குதிரையின் முடி, புதுமையான ஜெல் ஆகியவற்றுக்கு  இதில் முக்கிய பங்குண்டு.
 
2007 இல் வேதியியலாளர் இஜிரோ மியாகோ மின்கடத்திகள் தொடர்பான ஆராய்ச்சியில் மெழுகு போன்ற ஜெல்லை விபத்தாக கண்டறிந்தார். அப்போது அந்த ஜெல்லால் பயனில்லை என்று கைவிட்டவர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெல்லை டெஸ்ட் செய்ததில் அதன் தன்மை மாறாமல் இருப்பதைக் கண்டு வியந்துபோனவர், அதனை ஆய்வுக்கு பயன்படுத்தினார்.
 
ஜெல்லை எறும்புகளின் மேல் பூசி துலிப் மலர்களை வைத்து செய்த சோதனையில் ஜெல் பூசாத எறும்புகளை விட பூசியவை அதிகளவு மகரந்தங்களைக் கொண்டிருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
இயற்கை சூழல் மாறுபாட்டால் தேனீக்கள் அழிந்துவரும் நிலையில் இந்த செயற்கை தேனீக்கள் மகரந்தசேர்க்கைக்கு எதிர்காலத்தில்
உதவக்கூடும்.