சர்ச்சை எண்ணெய் குழாய்கள்!



அமெரிக்காவின் வடக்கு டகோடா மாநிலத்தில் நடைபெற்று வரும் எண்ணெய்குழாய் திட்டம் 3 மாதங்களில் முடிவுக்கு வரும் என அதன் கட்டுமான அதிகாரிகள் கூறுகின்றனர். 3.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இத்திட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டம் நடந்து வந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

எனர்ஜி ட்ரான்ஸ்பர் பார்ட்னர்-ETP யின் முறையான அனுமதி கிடைத்துள்ளதால் எண்ணெய்குழாய்களை ஆகே ஏரியின் உள்ளே பதித்து இலினாய்ஸ் வரை கொண்டு செல்லும் பணிகள் தொடர்கின்றன. “நிலத்தை துளையிடவும் குழாய்களை அமைக்கவும் 73 நாட்களே தேவை” என இடிபி நிறுவனத்தின் அதிகாரி கிரானடோ கூறியுள்ளார்.

எண்ணெய் குழாய்களிலிருந்து கசியும் எண்ணெய் குடிநீரை மாசுபடுத்தும் என்பதே மக்களின் போராட்டத்திற்கு காரணம். 1,886 கி.மீ தொலைவில் 4 மாநிலங்களின் வழியே செல்லும் எண்ணெய் குழாய் திட்டமிது.

ஒபாமா கைவிட்ட திட்டத்தை ட்ரம்ப் தொடர அனுமதியளித்துவிட்டார். ஆயினும் சட்டபூர்வ அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. போராட்டக்காரர்கள் டென்ட் அமைத்து தங்கி தொடர்ந்து போராடிவருவது பிரச்னை விஸ்வரூபமெடுப்பதையே காட்டுகிறது.