காந்தக்கருவி மாத்திரை!



வயிற்று வலிக்கு மாத்திரை சரி, ஆனால் விழுங்கிய மாத்திரை வயிற்றை புண்ணாக்காமல் இருக்கவும் அடிஷனலாக ஒரு மாத்திரை என்றால் அது  நியாயமா? ஆல்டர்னேட் ரூட் இதோ! பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை ஆராய்ச்சியாளர்கள் மாத்திரையை பாதுகாப்பாக வைத்து உடலில் செலுத்தும் காந்தக் கருவியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதன் மூலம் ஊசி குத்துவது, கொத்தாய் மாத்திரைகளை விழுங்குவது ஆகியவை குறையும். சிலிகோன் ஸ்பான்ஞ்ஜில் உள்ள காந்த கார்போனைல் இரும்பு மூலக்கூறுகள் பாலிமர் அடுக்கில் வைக்கப்பட்டுள்ளன. 6 மி.மீ அளவு கருவியில் மருந்து செலுத்தப்பட்டு, எந்த  இடத்தில்  சிகிச்சை  தேவையோ அவ்விடத்தில் வைக்கப்படுகிறது.

பின் இதனை தேவையான இடத்தில் நகர்த்தி  மருந்தை வெளியேறச் செய்யலாம். “பல்வேறு சிக்கலான நிலைமைகளிலும் இக்கருவியை செயல்படுத்தி மருந்தின் அளவை கட்டுப்படுத்த முடியும் என்பது இதன் ஸ்பெஷல்” என்கிறார் இதனை உருவாக்கிய எந்திரப்  பொறியியல்  பேராசிரியர் ம்யூ சியோவோ, பிஹெச்.டி. மாணவரான அலி ஷேடேமனி.