ஜோக்ஸ்
‘‘எங்க பொண்ணை பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்னு சொன்னது தப்பாப் போச்சு...’’ ‘‘ஏன்... என்னாச்சு?’’ ‘‘வாரா வாரம் பொண்ணு பார்க்க வந்து பஜ்ஜி, சொஜ்ஜி தின்னுட்டுப் போயிடுறாங்க!’’ - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
புலவருக்கு எதுக்கு கசையடி கொடுக்கறாங்க..?’’ ‘‘அந்தப்புரத்துக்கு ஒருநாள் மன்னரா இருக்கணும்னாராம்!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘யோவ், நம்ம கொ.ப.செ எப்ப கட்சி மாறினார்?’’ ‘‘உங்க கண்ணு முன்னாடி இப்பதானே தலைவரே மிஸ்டு கால் குடுத்தாரு...’’ - சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.
என்னதான் ஒரு கம்பெனி தயாரிக்கற ‘டீ’த்தூள் மாதிரியே இன்னொரு கம்பெனியும் தயாரிச்சாலும், அதை ‘காப்பி’யடிச்சிட்டாங்கன்னுதான் சொல்லணும். ‘டீ’யடிச்சிட்டாங்கன்னு சொல்ல முடியாது! - காப்பியடிக்காமல் சுயம்புவாக தத்துவம் சொல்வோர் சங்கம்
‘‘ஆஸ்பத்திரிக்குப் போகும்போது எல்லாரும் பழம்தானே வாங்கிட்டுப் போவாங்க... நீங்க என்ன பூ வாங்கிட்டுப் போறீங்க..?’’ ‘‘நான் நர்ஸை பார்க்கப் போறேன்!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
கபாலி சீரியல் நிறைய பார்ப்பான்னு எப்படிச் சொல்றீங்க ஏட்டய்யா?’’ ‘‘எனக்கு பதில் இனி இவர் திருடிவிட்டு மாமூல் கொடுப்பார்னு ஒருத்தரைக் கூட்டிக்கிட்டு வந்து அறிமுகப்படுத்தறானே!’’ - பா.ஜெயக்குமார், வந்தவாசி.
‘ஆசியா கண்டத்தை’ மேப்ல குறிக்கலாம். ‘ஆப்ரிக்கா கண்டத்தை’ மேப்ல குறிக்கலாம். ‘எம கண்டத்தை’ மேப்ல குறிக்க முடியுமா? - போகாத ஊருக்கு வழியைத் தேடி நேரத்தைக் கழிப்போர் சங்கம் - இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.
|