ஐந்தும் மூன்றும் ஒன்பது



ஒரு மனிதனின் உடலில் இருந்து உயிர் பிரிவது... அதன்பின் அது ஆத்மா என அழைக்கப்படுவது... அதற்கு வடிவமுண்டா? அதற்கு பசி, தாகம் எல்லாம் உண்டா? - இப்படி என்னுள் எழும்பிய பல கேள்விகளை நான் ஜோசப் சந்திரனிடமும் கேட்டேன். இம்மட்டில் ஜோசப் ஒரு அரிய விளக்கத்தை அளித்தார் என்றுதான்
சொல்வேன்.‘கணபதி சுப்ரமணியன்...

 நம்முடைய ஆய்வுகளிலும் தேடல்களிலும் நமக்கு அதிகம் கிடைத்தவை முதுமக்கள் தாழிகளும், அவர்களின் எலும்புக்கூடுகளும்தான். நாகரிக வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்திலேயே, இறந்து பிணமானவர்களை தூக்கி எறிந்து விடாமல் பூமிக்குள் புதைத்துள்ளனர் மனிதர்கள். இன்றுகூட நாம் அப்படியேதான் புதைக்கிறோம். ஆனால் அன்று ஒரு தாழிக்குள் உடம்பைப் புகுத்தி தாழியைத்தான் புதைத்தனர். இறந்துவிட்ட பிணத்தை அலட்சியமாகக் கருதாமல், அந்த உடம்புக்கு தங்களுக்குத் தெரிந்த விதத்தில் அவர்கள் தந்த மரியாதைதான் அது என்று தாராளமாகக் கூறலாம்.

அது மரியாதை மட்டுமல்ல... இறப்புக்குப் பிறகு இறந்தவர் என்றாவது ஒருநாள் எழுந்து வரலாம் என்று கூட தொடக்கத்தில் நினைத்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. பின்பு காலப்போக்கில் அறிவு வளர்ந்து, அம்மட்டில் ஒரு சடங்கும் உருவானது.  இந்த விஷயத்தில் பார்சிகளைத் தவிர மற்ற மதத்தவர்கள் இறந்த உடம்பை குப்பை என்றும் மாமிசம் என்றும் கருதுவதில்லை. அதை மதிக்கப் போய்தான் சமாதி எழுப்புவது முதல், அங்கே அவர்களை நினைத்து அஞ்சலி செலுத்துவது என எல்லாமும் தோன்றியது.

ஒரு நெடிய காலம் கூடவே வாழ்ந்த ஒரு மனிதன், மரணம் என்கிற ஒன்றால் அறவே இல்லாது போகிறான் என்கிற விஷயத்தை ஒரு மனதால் ஏற்க முடியவில்லை.
வாழ்வு என்பது மிக நீண்ட காலகதி! உயிரின் பிரிவு என்பது சில நொடிகளில் நடக்கும் நிகழ்வு! அது எப்படி ஒரு நீண்ட காலகதி, ஒரு சில நொடிகளில் ஒன்றுமில்லாமல் போகும்? போகவும் முடியும்? இந்தக் கேள்வியில்தான் உயிரின் அந்த மறுபக்க மர்மமும் நமக்குள் விரிகிறது...’ - என்று சொல்லிக்கொண்டே சென்றவர், ‘எனக்கு பலமாக ஒரு கருத்து உள்ளது - இது என் தனிப்பட்ட கருத்து’ என்றார். ‘எதுவாக இருந்தாலும் கூறுங்கள்’ என்றேன்.

‘இது மிக ஏற்றத்தாழ்வுள்ள சமுதாயம். தொடக்கத்தில் இந்த ஏற்றத்தாழ்வு இருந்திருக்கும் என்று கருதுகிறீர்களா?’ எனக் கேட்டார்.‘நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பில்லை... ஏற்ற இறக்கம் என்பதே மனிதர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவு அதிகரிக்கும்போதுதான் தோன்ற முடியும். அடுத்தவர் மீது ஆதிக்கம் செலுத்த முனையும்போதுதான் தோன்ற முடியும்’ என்றேன் நான். ‘சரியாகச் சொன்னீர்கள்... இந்த ஏற்ற இறக்கம் என்பதுதான் பாவம் - புண்ணியம் என்கிற இரண்டாகவும் உள்ளது. உண்மையில் ‘பாவம் என்றால் செயல், புண்ணியம் என்றால் விளைவு!’ என்றே விளங்கிக்கொள்ள வேண்டும்.

எந்த ஒரு செயலுக்கும் பதில் விளைவு என்கிற ஒரு விஷயம் உண்டு. இந்த இரண்டும் இல்லாமல் ஒருவர் வாழமுடியாது. நற்செயலுக்கு நல்விளைவு; தீயசெயலுக்குத் தீயவிளைவு என்று இதைத் தெளிவாக்கிக் கொள்ளலாம். இந்த செயல் + விளைவுக்குப் பின்னேதான் மனிதனின் ஆத்மா சிக்கிக் கிடக்கிறது. இதை இந்த இரண்டிடம் இருந்தும் மீட்பதுதான் எந்தச் செயலும் இல்லாத தவம். தவத்தில் மனிதன் நல்லதோ, கெட்டதோ எதையும் செய்வதில்லை. மாறாக இஷ்ட தெய்வ நினைவு மட்டும் கொண்டவனாக இருக்கிறான். எனவே அந்த நினைவுக்குரிய தெய்வத்தை தவத்துக்கான பரிசாக அடைகிறான். இவ்வாறு தவம் செய்யாதவர்களான செயல் மற்றும் விளைவுக்குரிய மனிதர்கள், தங்கள் செயல்பாட்டிற்கு ஏற்ற விளைவை அனுபவிக்கும் விதமாக பிறப்பெடுக்கிறார்கள். ஆத்மா அதற்கேற்ப பயணம் செய்கிறது. இம்மட்டில் ஆத்மாவுக்கு அறிவும் ஆற்றலும் இருந்தால் அல்லவா அது சாத்தியம்?’

- என்று ஜோசப் சந்திரன் கேட்ட கேள்வி என்னையும் சிந்திக்க வைத்தது. அவர் தொடர்ந்தார்... ‘கணபதி! நம்மில் பிறக்கும்போதே எவ்வளவு ஏற்றத்தாழ்வு? ஏழை, பணக்காரன், கறுப்பு, சிவப்பு, ஒல்லி, குண்டு என்று ஒரு குழந்தை பிறக்கும்பொழுதே ஏற்றத் தாழ்வுடன் பிறக்க கடவுள் எப்படிக் காரணமாக முடியும்? கடவுள் ஏற்றத்தாழ்வுடனா படைப்பார்? அப்படிப் படைத்தால் நாம் அவரைக் கடவுள் என்று மதிப்போமோ?’ -  அடுத்து அவர் கேட்ட கேள்வியும் ஆணித்தரமாய் விளங்கிற்று!’’- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

அந்தப் பறவை ஈங்கோயை மிகவே கவனிக்க வைத்தது. நின்று கூர்ந்து பார்த்தான். அந்தப் பறவையும் சில நிமிடங்கள் அமர்ந்த நிலையில் தன் சிறகுகளை விரித்து படபடத்துக் கொண்டது. பின் வானில் ஏறிப் பறக்கத் தொடங்கிவிட்டது. ஈங்கோய் தன் மூங்கில் கூடையைத் தூக்கிக் கொண்டான். அது அவன் தலையில் ஏறிக்கொள்ள, அவன் தோளில் ஒரு நூல் பை தொங்கியபடி இருந்தது.

அவன் அந்த வனப்பரப்பில் சற்றே நடந்து நடந்து உருவான ஒரு ஒற்றையடிப் பாதை போன்ற தடத்தில் நடக்கத் தொடங்கினான். நடக்கும்போது இடையூறு ஏற்படாதபடி வேட்டியை வீரகச்சமாக கட்டிக் கொண்டிருந்தான். அந்த நாளில் விளையாடும்போது மடித்துக் கட்டிக் கொள்வதையே வீரகச்சம் என்பார்கள். குறிப்பாக மல்யுத்தத்தின்போது வீரகச்சம்தான் தோது!

அவனது ஆடை மிக வெளுப்பாய் தூய்மையாக இருந்தது. வனவாசி ஒருவன் தூய வெள்ளாடையை உடுத்துவது ஒரு ஆச்சரியமான விஷயம். காரம் போட்டுத் துவைத்தால்தான் வெள்ளை தங்கும். ஈங்கோயின் மேனிமேல் நிறைய பச்சை குத்தப்பட்டிருந்தது. நெற்றியிலும் புருவ மையத்தில் சூரியன் போல் பச்சை ெபாறிக்கப்பட்டிருந்தது. அவன் தன் தலைமுடியை சிரசுக்கு மேலே கூம்பு போலாக்கிக் கட்டியிருந்தான். முனிவர்களின் ஜடாமுடி கோபுரம் போல அது இருந்தது. அவன் உடம்பு நல்ல வாளிப்போடு கட்டுமஸ்தாக காணப்பட்டது. சரியான உயரத்தில் சரியான சதைக் கட்டுகளோடு அவன் காணப்பட்டான்.
அவன் நடந்து செல்லும் வழியில் ஆங்காங்கே இன்று மனிதர்கள் அதிக அளவில் பயன்படுத்திவிட்டு வீசி எறியும் பேப்பர் கப்புகளும் கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களும் கிடந்தன. அதை எல்லாம் அவன் தன் தோளில் தொங்கும் பைக்குள் போட்டுக்கொண்டே நடந்தான்.

ஓரிடத்தில் மலைப்பாம்பொன்று தன் நடுவயிறு மிகப்பருத்த நிலையில் வரையாட்டுக் குட்டி ஒன்றை விழுங்கி விட்டு அதை ஜீரணிக்கப் போராடியபடி இருந்தது. ஈங்கோய் அதன் தலை அருகேயே சென்று நின்றவனாக அதைக் கூர்ந்து பார்த்தான். அதுவும் தன் மாதுளை முத்து போன்ற விழிகளால் அவனைப் பார்த்தது. அது பன்னிரண்டு அடி நீளத்தில் இருந்தது. அதன் மேனிமேல் மஞ்சள், வெள்ளை, கறுப்பு எனும் நிறங்களில் பூ இதழ்களைக் கசக்கிப் போட்டதுபோல ஒரு தோற்றம். எண்ணெய் பூசியது போல ஒரு மினுமினுப்பு வேறு. அந்த நொடி அவனுக்குள் சிருஷ்டி குறித்த ஒரு எண்ணம் தோன்றியது. கூடவே நந்தி அடிகளும் அவன் மனக்கண்ணில் தோன்றினார்.

ஈங்கோயின் தலைச்சடையில் ஒரு காலத்தில் நிறைய ஈருகள் இருந்தன. அவை முற்றி பேனாகவும் ஆகிவிட்டிருந்தன. அதை ஈருவாளி எனும் மரச்சீப்பால் வாரி, சீப்பின் பல்லிடுக்குகளில் அதைச் சிக்கச் செய்து பின் அந்த இடுக்கை நசுக்கிட அந்த பேன் பட்டென்ற சப்தத்தோடு உடம்பு வெடித்துச் செத்துப் போகும். அவனுக்கு ஏனோ அந்த சப்தம் மிகப் பிடிக்கும். அதை ஒரு நாள் கவனித்த நந்தி அடிகள், ‘‘அந்தப் பேன் உன்னை என்ன செய்தது? எதற்கு இப்படி அதை நசுக்கிக் கொல்கிறாய்? இதில் அதன் உடல் வெடிக்கும் சப்தத்தை ரசிக்க வேறு செய்கிறாயே...

பதிலுக்கு உன் உடம்பில் வெடிப்பு ஏற்பட்டு துன்பப்படுவாயே... அப்போது என்ன செய்வாய்?’’ - என்று கேட்கவும் ஈங்கோய்க்கு சற்று அதிர்ச்சியாகி விட்டது. திருதிருவென விழித்தான். அப்போது சில பேன்கள் தரையில் ஓடத் தொடங்கின. அதில் ஒன்றை தன் ஆட்காட்டி விரல் நுனியால் ஒத்தி எடுத்த நந்தி அடிகள் தன் உள்ளங்கையில் விட்டு தன் நரைத்த தாடி நெகிழ கண்கள் மினுங்க பரவசப்பட்டுப் போனார். அவர் கைகளின் ரேகைக்கோடு கள் மேல் அந்த பேன் இப்படியும் அப்படியும் ஓடியது.

‘‘பாத்தியா..? வாழத் துடிக்குது இது! நம் வரைல இது எவ்வளவு சின்னது... ஆனா இதுக்குள்ளேயும் வாய், வயிறு, கை, கால்னு உறுப்புகள். பிரம்ம சிருஷ்டியை என்னன்னு சொல்றது?’’ - என்று கேட்டிருந்தார்.‘‘ஆமாம் சாமி... இதனால எல்லாம் என்ன பிரயோஜனம் சாமி! இது வாழ்ந்து என்ன பண்ணப் போகுது?’’ என்று அப்போது தனக்குத் தோன்றியதைக் கேட்டான் ஈங்கோய். அப்போது ஒரு மெல்லிய கோபம் நந்தி அடிகள் முகத்தில் தென்படலாயிற்று.
‘‘என்ன ஈ... (அவர் இப்படித்தான் அழைப்பார்) நீயும் நானும்தான் பிரயோஜனப் பிறப்பா? இது இந்த பூமிக்கு பாரம்னு தோணுதா...?’’ - என்றும் கேட்டார். ஈங்கோய்
மெளனம் காத்தான்.

‘‘இதெல்லாம் பொறக்கவே நாமதான் காரணம்! நம்ம செயல்பாடுகள்தான் காரணம். குறிப்பா நம்ம சித்தமும் அதுக்குள்ள அலையற எண்ணங்களும் காரணம்...  உனக்கு சொன்னா புரியாது. நீ இன்னும் மனம் கட்டப் பழகலை... இப்பதான் சுவாசம் கட்டப் பழகியிருக்கே! நீ இன்னும் ரொம்ப தூரம் போகணும். சுருக்கமா ஒரு விஷயத்த சொல்லிடறேன்... புரிஞ்சிக்க முடிஞ்சா புரிஞ்சிக்கோ! நம் தலைக்கு மேல உயிர்கள் வாழறது ஒரு கர்ம அமைப்பு. உன் கபாலம் ஞான விழிப்போட இல்லை - பாவ புண்ணிய கர்மக்கட்டுக்குள்ள இருக்குன்னு அர்த்தம். நீ யோகத்துக்கு மாறும்போது அது தானா உன்னை விட்டுப் போய் உன் முடிக்கூட்டம் பிரபஞ்ச சக்தியை ஆகர்ஷிக்கற சக்திக் கரமா மாறிடும். தலைமுடியை சாதாரணமா நினைக்காதே.

உள்ள இருக்கறது உயிர் - மண்டைல இருக்கற உயிர்தான் மயிர். இதைக் கேசம்னு சொல்வாங்க. ரோமம்னும் சொல்வாங்க. கேசம்ங்கற வார்த்தை சிவா, விஷ்ணு, பிரம்மாங்கற மூணு பேரோட கூட்டுறவுச் சொல். நீ மாணவனா என் கணிதவாடில படிக்கறவனா இருந்திருந்தா கல்பலகைல எழுதிக் காட்டி விளக்கியிருப்பேன். இல்லாமப் போயிட்டே... ப்ச்!’’- அன்று அவர் ஒரு பேனைத் தொட்டு இப்படி எங்கெங்கோ போய்விட்டார். அதை எல்லாம் எண்ணியபடியே அந்த மலைப்பாம்பை விட்டு விலகி நடக்கத் தொடங்கிய ஈங்கோயின் நடை மிக வேகமாகி, மலையின் அடிவாரப் பரப்பை அடைந்தது.

அடிவாரத்தில் ஆங்காங்கே கண்டு கண்டாய் பாறைகள்... அவற்றில் எண்கள், எழுத்துகளின் பொறிப்பு! அடிவாரத்தில், அந்த மலை மேல் பொழியும் மழை நீரெல்லாம் வந்து தேங்கும் சுனைப் பரப்பொன்று... அதில் அல்லியும் தாமரைகளும் கலந்து வளர்ந்திருந்தன. அருகாமைப் பாறையில் முக்கோண வடிவில் தேன்கூடுகள் கட்டப்பட்டிருந்தன. சுனை நீருக்குள் கழுத்தளவு பாகம் மட்டும் ெவளித் தெரிய தன் நீண்ட தலை முடிக் கூட்டம் சுனை நீரில் மிதந்தபடி இருக்க, ஒருவகை தியானத்தில் இருந்தார் நந்தி அடிகள்.

 ஈங்கோய் அவர் கண் விழிக்கும் வரை காத்திருக்கும் முடிவோடு எதிரில் ஒரு பாறை நிழலில் போய் குத்துக் காலிட்டு அமர்ந்து கொண்டான். கூடை அவன் அருகில் அமர்ந்தது!பங்களாவுக்குள் நுழைந்த அந்த போலீஸ் வாகனம், வாட்ச்மேன் தங்கவேலு முகத்தில் சலன ரேகைகளை உருவாக்கிட, உள்ளிருந்து கணபதி சுப்ரமணியனும் வள்ளுவரும் அந்த போலீஸ் ஆபீசர் சந்தானத்துடன் இறங்கினர். வள்ளுவரை மறுபடியும் பார்த்ததில் தங்கவேலுவுக்கு மேலும் அதிர்ச்சி.‘‘போச்சுடா... இந்த ஆள் விடமாட்டான் போலத் தெரியுதே...’’ என்று முணுமுணுத்தான். அப்படியே அந்த போலீஸ் கார்  சந்தானத்துடன் திரும்ப வெளியேறத் தொடங்கவும், பாதி மூடிய ேகட்டை அவசரமாகத் திரும்பவும் திறந்தான். வள்ளுவர் காரில் திரும்பிச் சென்ற சந்தானத்தையே பார்த்தபடி போர்ட்டிகோவில் நின்றிருக்க, கார் புகையைப் பரப்பியபடி மறைந்தது. தங்கவேலுவும் கேட்டை இழுத்து மூடினான்.

வள்ளுவர் அப்படிப் பார்ப்பதில் ஏதோ அர்த்தம் இருப்பது போலத் தோன்றியது கணபதி சுப்ரமணியனுக்கு...‘‘என்ன வள்ளுவரே... அப்படிப் பாக்கறீங்க?’’‘‘ஹும்.. என்னத்த சொல்ல? சுபமா எதுவும் கண்ணுல பட மாட்டேங்குது. காதுலயும் விழ மாட்டேங்குது. சில நேரம் நம்ம காலவெளி இப்படி அமைஞ்சிடுது’’ என்று புதிர் போலப் பேசினார்.கணபதி சுப்ரமணியனுக்குப் புரிந்து விட்டது!

‘‘தினமும் இவர் கார்லதான் ஆபீஸ் போவார்...’’
‘‘இதுல என்ன
அதிசயம் இருக்கு?’’
‘‘கார் ரிப்பேரானா கூட அதைத் தள்ளிக்கிட்டே ஆபீஸ் போறாரே?’’

வாழ்வு
என்பது
மிக நீண்ட
காலகதி! 
உயிரின் பிரிவு
என்பது
சில
நொடிகளில் நடக்கும்
நிகழ்வு!
அது எப்படி ஒரு நீண்ட காலகதி,
ஒருசில
நொடிகளில் ஒன்று
மில்லாமல் போகும்? போகவும் 
முடியும்?

‘‘எங்க வீட்டுக்கு
வந்தவன் நல்ல
பொறுப்புள்ள திருடன்...’’
‘‘எப்படிச் சொல்றீங்க?’’
‘‘திருடி முடிச்சதும் பத்திரமா வீட்டைப் பூட்டிட்டுப் போயிருக்கான் பாருங்க!’’
- என்.பர்வதவர்த்தினி, சென்னை-75.

- தொடரும்...

இந்திரா  சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்