ஜோக்ஸ்




‘‘நீங்க தர வேண்டிய ஃபீஸ் பாக்கிய கேட்டு நான் உங்க வீட்டுக்கு எத்தனை தடவை நடக்குறது..?’’
‘‘நீங்கதானே வாக்கிங் போனா உடம்புக்கு நல்லதுன்னு சொன்னீங்க டாக்டர்!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

ஸ்பீக்கரு...

‘‘மேடைக்கு அருகில் ‘ஸ்லிப்’பில் அமர்ந்து செருப்பு எறிய காத்திருப்போரே! ‘கல்லி’யில் அமர்ந்து என்னை ரசித்துக் கொண்டிருக்கும் மகளிரணியினரே! ‘மிட் ஆனில்’ அமர்ந்திருக்கும் உட்கட்சி துரோகிகளே! ‘லாங் ஆனில்’ அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சி நண்பர்களே...’’
- கே.லட்சுமணன், திருநெல்வேலி

‘‘ஆனாலும் தலைவர் கேட்கிறது ரொம்ப ஓவர்...’’
‘‘என்ன கேட்டாரு?’’
‘‘நம்ம கட்சியோட தோல்விக்குக் காரணம் என்னன்னு ஐ.நா. சபை விசாரிக்கணும்னு கேட்கிறாரே..!’’
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

‘‘எனக்கு அப்புறம் நீதான்யா ரொம்ப
கவனமா பார்த்துக்கணும்...’’
‘‘எதைத் தலைவரே,
கட்சியையா? மகளிரணித்
தலைவியையா..?’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘நான் பொய் சொன்னா
என் மனைவி
கண்டுபிடிச்சிடுவா!’’
‘‘என் மனைவி கரண்டியைப்
பிடிச்சிடுவா!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

தத்துவம் மச்சி தத்துவம்

மெடிக்கல் லேப்ல ப்ளட் டெஸ்ட் எடுக்கலாம், யூரின் டெஸ்ட் எடுக்கலாம்; நியூக்ளியர் டெஸ்ட் எடுக்க முடியுமா?
- பிளட் டெஸ்ட்டில் கூட ஃபர்ஸ்ட் மார்க் வாங்க
நினைப்போர் சங்கம்
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

‘‘எதுக்குய்யா சாகப் போற வயசுல இருக்கற பெரியவரைத் தூக்கிட்டு வந்திருக்கீங்க?’’
‘‘உங்களை வாழ்த்த வயதுள்ளவர் இவர் ஒருத்தர்தான் தலைவரே!’’
- சிக்ஸ் முகம்,
கள்ளியம்புதூர்.