என் செல்லம் என்ன மாதிரி!



விநோத ரஸ மஞ்சரி

என் புள்ள என்னை மாதிரி!’’ எனப் பெருமைப்பட்டுத்தான் நமக்குப் பழக்கம். நம் செல்லப் பிராணிகளும் நம்மை மாதிரியே இருக்குமா? ‘‘இருக்கும்’’ என்கிறார் ஜெர்மனி நாட்டு புகைப்பட நிபுணரான இனஸ் ஆபிஃபேன்டி. மனிதர்களை அவர்களின் செல்லப்பிராணிகள் போலவே போஸ் பண்ண வைத்து இவர் உருவாக்கிக்கொண்டிருக்கும் ‘Dog People’ எனும் ஆல்பம் அகில உலகத்தையும் ‘அட’ போட வைத்திருக்கிறது.

‘‘நான் செல்ல நாய்க்குட்டிகளை முதலில் போட்டோ எடுத்து, அதன் எஜமானர்களிடம் காட்டுவேன். ‘இதே மாதிரி நீங்கள் போஸ் கொடுங்கள்’ என்றதும் அவர்கள் தயாரிப்பே இல்லாமல் இயல்பாக அந்த முகபாவத்தைக் கொண்டு வந்தார்கள்.

 மனிதர்கள் தங்கள் செல்ல நாய்களோடு நெருங்கிப் பழகும்போது அவற்றின் சின்ன அசைவுகளைக் கூட கணிக்கும் அளவுக்கு அவற்றை முழுவதுமாகப் புரிந்துகொண்டுவிடுகிறார்கள். இந்த ஆல்பம் சொல்ல வரும் மெசேஜ் இதுதான்!’’ என்கிறார் இனஸ் புன்னகையுடன்!

- ரெமோ