அ‘ஊர்சுற்றி புராணம்’ படத்தைத் தொடங்கிவிட்டார் களஞ்சியம். இயக்கம், ஹீரோ இரண்டுமே அவர்தான். இவரது அறிமுகத்தில் வளர்ந்த அஞ்சலிதான் ஹீரோயின். தமிழ், தெலுங்கு என்று பிஸியாக இருக்கும் அஞ்சலியின் தேதிக்காகக் காத்திருக்கிறார்.
அஅண் ணன் ராஜாவும், தம்பி ரவியும் மறுபடியும் ஒரு படத்தில் இணைகின்றனர். ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இந்தப் படமும் ரீமேக்தான். அமீர்கான் நடித்த இந்திப் படத்தின் கதையையே தமிழுக்கு ஏற்ப முலாம் பூசுகிறார் ராஜா.
அலிளிழிணி கீளிலிதி. மிஷ்கின் தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இது. பொதுவாக ஓநாய்கள் கூட்டமாகத்தான் திரியும். தனி ஒரு ஓநாய் என்ற பெயர் ஏன்? காரணம் கேட்டால், ‘‘நான் தயாரிக்கும் படங்களும் தனித்துவமாக இருக்கும் என்பதால் அப்படி வைத்தேன்’’ என்கிறார்.
அசேரன் அடுத்தடுத்து சொந்தப் படங்களை மீடியம் பட்ஜெட்டில் உருவாக்குகிறார். ஒரு படத்தை அவரது உதவியாளர் எழில்பாரதி இயக்குகிறார். ஏற்கனவே ரோகிணி இயக்கத்தில் ஒரு படம் வெளியிடத் தயாராகி விட்டது.

அஏற்கனவே ‘சில பொய்களும், சில உண்மைகளும்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ பாலபாரதி, தற்போது ‘அவர்களும், அவர்களும்’ என்ற தனது இரண்டாவது தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
அநேரம் இருந்தால் எந்த பந்தாவும் செய்யாமல் இலக்கியக் கூட்டங்களுக்கு வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். கவனமாக உரைகளைக் கேட்கிறார்.
அவருஷத்திற்கு ஒரு தடவை குடும்பத்தை கூட்டிக் கொண்டு ஃபாரீன் ட்ரிப் போய்விடுவது என்ற முடிவில் இருக்கிறார் ஜீவா. இந்த வருஷம் கோடைக்கு சுவிஸ் செல்ல டிக்கெட் கன்ஃபர்ம் பண்ணிவிட்டார்.
அஅப்சல் குருவை தூக்கிலிட்டதைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார் ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி’ தலைவர் யாசின் மாலிக். தனிப்பட்ட பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்த அவர், அங்கு உண்ணாவிரதம் இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. மும்பை தாக்குதல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீது அவர் பக்கத்தில் இருந்தது இன்னும் சர்ச்சையானது. அநேகமாக மாலிக்கின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படலாம்.

அரஜினி, கமலை வைத்து அதிக படங்களை இயக்கிய பெருமைக்குரியவர் எஸ்.பி.முத்துராமன். டைரக்ஷனிலிருந்து ஓய்வு பெற்றிருந்தவருக்கு மறுபடியும் படம் இயக்கும் ஆசை துளிர்த்துள்ளது. இவர் இயக்கவுள்ள படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் தாணு.
அகடிதம் எழுதுவதில் அலாதி பிரியம், வண்ணதாசனுக்கு. இதழ்கள், பத்திரிகைகளில் தம் நண்பர்கள் பற்றிய செய்திகளையோ, படைப்புகளையோ படித்தால், கடிதம் எழுதி பாராட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அ‘‘கல்யாணம் - நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய மிஸ்டேக்!’’ என்ற புகழ்பெற்ற வாசகத்தைச் சொன்ன ஜீனத் அமன் மீண்டும் மணமேடை ஏறுகிறார். 61 வயது ஜீனத் திருமணம் செய்துகொள்ளப் போவது, தன்னைவிட 30 வயது இளையவரான ஒரு அரசியல்வாதியை... ஆனால் கல்யாணம் 5 ஆண்டுகளுக்குப் பிறகுதானாம்!
அமம்தா பானர்ஜிக்கு ஓவியங்கள் வரைவது ஹாபி. ‘‘ரவீந்திரநாத் தாகூருக்கு ஈடாக வரைகிறார்’’ என சில அடிப்பொடிகள் புகழ்ந்து தள்ள, இப்போது அடிக்கடி பிரஷ்ஷும் கையுமாக வலம் வருகிறார் மம்தா.

அ‘டேவிட்’ படத்தில் நடித்ததற்காக ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லை லாரா தத்தா, டைரக்டர் பிஜோய் நம்பியார் தனது அடுத்த படத்தில் நல்ல ரோல் தர வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் போட்டாராம்!
அபார்ட்டிகள், சினிமா விழாக்களுக்கு வருவதில்லையே தவிர, நண்பர்களின் குடும்ப விழாக்களுக்கு சத்தம் போடாமல் முதல் ஆளாக அல்லது அரவமே காட்டாமல் கடைசி ஆளாகப் போய் கலந்து கொண்டு விடுகிறார் அஜித். ‘‘நான் வருவதாக யாரிடமும் சொல்லக்கூடாது, குறிப்பாக மீடியாவிற்கு சொல்லக்கூடாது’’ என்பது மட்டும்தான் அவரது ஒரே நிபந்தனை.
அபார்ட்டிகள், சினிமா விழாக்களுக்கு வருவதில்லையே தவிர, நண்பர்களின் குடும்ப விழாக்களுக்கு சத்தம் போடாமல் முதல் ஆளாக அல்லது அரவமே காட்டாமல் கடைசி ஆளாகப் போய் கலந்து கொண்டு விடுகிறார் அஜித். ‘‘நான் வருவதாக யாரிடமும் சொல்லக்கூடாது, குறிப்பாக மீடியாவிற்கு சொல்லக்கூடாது’’ என்பது மட்டும்தான் அவரது ஒரே நிபந்தனை.
சைலன்ஸ்
களவாண்ட நடிகர் ஆறு மாதங்களாக வாட்டரை ஏகத்திற்கும் குடித்துவிட்டு அலம்பல் செய்து கொண்டிருந்தார். வீட்டுப் பிரச்னைதான் காரணமாம். நண்பர்கள் எல்லோரும் அவரை கூட்டி உட்கார வைத்து பஞ்சாயத்து செய்ததில் இப்போது பார்ட்டி தெளிவாகி விட்டார். ஆனால் ஆறு மாதம் போட்ட வாட்டரில் உடம்பு வீக்காகி ப்ரேமில் தெரிவதுதான் டைரக்டர்களுக்கு வேதனையாக இருக்கிறது.
கிட்டத்தட்ட அந்தக்கால கார்த்திக்கின் ஸ்டைலுக்கு மாறி வருகிறாராம் மணக்கும் காமெடியன். இவரது கால்ஷீட்டுக்காக பலர் காத்திருக்க, சம்பளத்தை நாள் கணக்காக மாற்றி ஏற்றிக்கொண்டிருக்கும் காமெடி, ‘மூடு’ கழன்றால் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து காணாமல் போகிறார் என கண்ணீர் வடியத் தொடங்கியிருக்கிறதாம் புரொடக்ஷன் ஏரியாவிலிருந்து.