தத்துவம் மச்சி தத்துவம்





‘‘அவருக்கு எல்லாப் படத்துலயும் பிச்சைக்காரன் வேஷம்தான் கிடைக்குது...’’
‘‘புவர் ஸ்டார்னு சொல்லு..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘கடைசியா என்ன சொல்ல விரும்பறே கபாலி..?’’
‘‘வேற எந்த ஜெயிலுக்கும் அனுப்பிடாம, என்னைப் ‘புழல்’லயே போடுங்க எசமான்... சென்னையில மட்டும்தான் ரெண்டு மணி நேரம் பவர்கட்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

இறந்தவருக்கு ‘அஞ்சலி’ கவிதை பாடலாம்; ‘அனுஷ்கா’ கவிதை பாட முடியுமா?
- எங்கேயும் எப்போதும் அஞ்சலி புகழ் பாடுவோர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.

கடையில மரக்கட்டில் வாங்கலாம்; இரும்புக் கட்டில் வாங்கலாம். ஆனா, ‘ஆட்சிக் கட்டில்’ வாங்க முடியுமா?
- எப்படியாவது ஆட்சிக்கட்டிலில் உட்கார்ந்து விடத் துடிப்பவர்கள் சங்கம்
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

‘‘மருந்தை சாப்பிட்டுட்டு உங்களை ஒரு வாரம் கழிச்சுத்தானே வரச் சொன்னேன்... இன்னிக்கு ஏன் வந்தீங்க?’’
‘‘இன்னிக்கு உங்க நர்ஸ் வரச் சொல்லியிருந்தாங்க டாக்டர்...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

ஒருத்தரை புகழும்போது ‘விடிவெள்ளி’ன்னு சொல்லலாமே தவிர, விலை அதிகம்ங்கிறதுக்காக ‘விடி தங்கம்’, ‘விடி வைரம்’னு சொல்ல முடியாது!
- வானத்தில் நம்பிக்கை நட்சத்திரத்தைத் தேடுவோர் சங்கம்
- எஸ்.பூவேந்தரசு, கம்பைநல்லூர்.

‘‘நேத்து நடந்த கூட்டத்தில் பாலியல் வன்கொடுமை பத்தி மகளிர் அணித்தலைவி இவ்வளவு ஆவேசமா பேசியிருக்கக் கூடாது தலைவரே...’’
‘‘ஏன்யா..?’’
‘‘கூட்டத்துக்கு வந்திருந்த நிறைய பேரு, உங்களை ‘சந்தேகமா’ பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க..!’’
- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.