ஜோக்ஸ்





லஞ்சப்பணத்தை ‘கவர்’க்குள்ள வச்சு நம்ம தலைவர் வாங்கறது எதிர்க்கட்சிக்காரங்களுக்கு தெரிஞ்சு போச்சு...’’
‘‘அப்புறம் என்னாச்சு..?’’
‘‘இப்பல்லாம் நம்ம தலைவரை ‘கவர் ஸ்டாரே’ன்னுதான்
கூப்பிடுறாங்க..!’’
- எஸ்.சங்கர், திருப்பரங்குன்றம்.

என்னதான் நவீனமயமாக்கப்பட்ட வங்கின்னாலும், அங்க கரன்ட் அக்கவுன்ட் மட்டும்தான் ஆரம்பிக்க முடியும். பேட்டரி அக்கவுன்ட், இன்வெர்ட்டர் அக்கவுன்ட்லாம் ஆரம்பிக்க முடியாது!
- கரன்ட் அக்கவுன்ட்டில் கரன்ட் பில் கட்டுவோர் சங்கம்
- எஸ்.பூவேந்தரசு, கம்பைநல்லூர்.

போர்க்களத்தில் எதிரிநாட்டு மன்னன் அப்படி என்ன கேட்டுவிட்டான் என்று மன்னர் கடுப்போடு இருக்கிறார்..?’’
‘‘நம் மன்னரைப் பார்த்து, ‘கண்ணா... மண்ணு தின்ன ஆசையா’ன்னு கேட்டானாம்!’’
- கி.ரவிக்குமார், நெய்வேலி.

காசு போட்டு நோட்டு வாங்கினா அது புத்தகக் கடை; நோட்டு போட்டு காசு வாங்கினா அது பழைய புத்தகக் கடை!
- பரீட்சை நேரத்தில் பழைய புத்தகக் கடையில் பாடப் புத்தகம் தேடுவோர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.

இந்த டாக்டருக்கு எந்த பேஷன்ட்டும் வர்றது இல்லையாம்...’’
‘‘அப்புறம்..?’’
‘‘கோர்ட்ல ஆட்கொணர்வு மனு போடலாமான்னு
கேட்கறார்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

என் பையன் மாசம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான்...’’
‘‘என்ன பொருத்தம் பாருங்க சம்பந்தி... என் பொண்ணு மாசம் ஐம்பதாயிரம் ரூபாய் செலவு பண்றா!’’
- ஜே.தனலட்சுமி, கோவை.

என்னதான் ‘பவர்ஸ்டாரா’ இருந்தாலும், அவர் வீட்டுல கூட இரண்டு மணி நேரம் பவர்கட் ஆகும்!
- பவர்கட் நேரத்தில் பலவிதமாக யோசிப்போர் சங்கம்
- வே.முருகேசன், சென்னை-88.