தத்துவம் மச்சி தத்துவம்





‘‘கபாலி, நேத்து டாஸ்மாக் பக்கத்துல ஒருத்தர்கிட்ட சரக்கு
திருடினியாமே..?’’
‘‘நான் ‘செயின் பறிப்பு’ செய்யற கௌரவமான திருடன்... ‘ஒயின் பறிப்பு’ செய்யற சில்லரைத் திருடன் இல்ல ஏட்டய்யா!’’
 வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.

என்னதான் பசு மாட்டுக்கு ரோஜாப்பூவை சாப்பிடக் கொடுத்தாலும், அந்த பசு மாடு வழக்கம் போல மில்க்தான் தரும்; ரோஸ்மில்க் எல்லாம் தராது!
 அமலா பாலை நினைத்தபடி ஆவின் பால் குடிப்போர் சங்கம்
 கே.கே.ரமேஷ், திருச்சி.

‘‘நான், என் மனைவி, ரெண்டு பசங்கன்னு வீட்டுல எல்லோரும் டாக்டர்ஸ்...’’
‘‘உங்க வீட்டுக்கு அடிக்கடி ஒருத்தர் வந்துட்டுப் போறாரே... அவர் யாரு?’’
‘‘அவர் எங்க ஃபேமிலி பேஷன்ட்!’’
 க.கலைவாணன், திருத்தணி.


‘‘இப்பல்லாம் தலைவரோட மேடைப் பேச்சைக் கேட்க பெண்களே வர்றதில்லையே... ஏன்?’’
‘‘அடிக்கடி பெண்கள் கூட்டத்தைப் பார்த்து, ‘நாளைய மகளிரணித் தலைவி யாரு?’ன்னு கேட்கறாரே!’’
 அம்பை தேவா, போரூர்.

பட்டர் நான், பட்டர் பிஸ்கெட், பட்டர் மில்க்... இதையெல்லாம் சாப்பிட முடியும்! அதுக்காக ‘பட்டர்’ஃப்ளையை சாப்பிட முடியுமா?
 ஆர்யபட்டர் லெவலுக்கு தத்துவங்களை யோசிப்போர் சங்கம்
 பர்வீன் யூனுஸ், சென்னை44.

‘‘அந்த நடிகை ஏன் ரொம்ப சோகமா இருக்காங்க..?’’
‘‘வயதுக்கு அதிகமா சொத்து சேர்த்துட்டதா, அவங்க மேல கேஸ் போட்டுட்டாங்களாம்..!’’
 மு.மதிவாணன்,
அரூர்.

‘‘தலைவரை ஏன் உடனே ரிலீஸ் பண்ணிட்டாங்க..?’’
‘‘அவரோட அறுவைப் பேச்சு தாங்காம, ஜெயில்ல நிறைய கைதிங்க தப்பிச்சுப் போக டிரை பண்றாங்களாம்..!’’
 பெ.பாண்டியன்,
காரைக்குடி.