வலைப்பேச்சு



நாங்க நான்வெஜிடேரியன்ஸ் என்னைக்காவது சாம்பார் சுவையில் மட்டன் குழம்பு, புடலங்காய் சுவையில் ப்ரான் க்ரேவினு செஞ்சிருக்கோமா?? நீங்க மட்டும் ஏன்டா மீன் வறுவல் சுவையில் சேனைக்கிழங்கு, சிக்கன் போலவே இருக்கும் சோயாபீன்ஸ், கல்லமாவில் அவித்த முட்டைனு எங்க உயிரை எடுக்குறீங்க... யு ப்ளடி
வெஜிடேரியன்ஸ்.

எப்பவும் ட்ரெஸ் இல்லாம இருக்கணும் டாக்டர்! அதுக்கு என்ன பண்ணலாம்?

எதே! என்ன கேட்கறீங்கன்னு புரியலியே!அதான் டாக்டரே... இந்த... மன அழுத்தம் இல்லாம இருக்கணும்னா என்ன செய்யணும்? அதைத்தான் கேட்டேன்.
ஓ ஸ்ட்ரெஸ்ஸா!! வெளங்கிடும்.ஆங்கிலம் இனி அவசரமாய் சாகும்!

ரூ 1000 ஐ எல்லாருக்கும் குடுத்தா என்ன சொல்வே?
~ பணக்காரங்களுக்கு ஏன் கொடுக்கணும்னு குறை சொல்வேன்.
சரி, சில வரைமுறை வகுத்து குடுத்தா என்ன சொல்வே?
~ சிலருக்கு மட்டுமே குடுக்குறாங்கன்னு குறை சொல்வேன்.
அப்போ எப்படிதான் குடுக்குறது?
~ எப்பிடி குடுத்தாலும் குறைதான் சொல்வோம்.

டிக்டாக்கை uninstall செய்துவிட்டால் உருப்படுவேன் என மனம் உறுதியாய் நம்பியது. பிறகு உருப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம் எனப் புரியாமல் மனம் குழப்பமடையும் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்.

Teams call முடிஞ்சதும் lunch கிளம்பறதுக்காக, laptop screen அ சரியா மூடாம டைரிய keypadல வச்சுட்டு போயிட்டேன் போல. அது பாட்டுக்கு yyyyyyuuuuiiiiiiனு எதோ type ஆகி chat windowல நண்பருக்கு போயிருக்கு.
7 கழுத வயசாவுது என்ன விளையாட்டு’னு reply வந்துருக்கு.
என்னைய எந்த ரேஞ்சுக்கு நினைச்சுருப்பாப்ல ச்சைக்!!!

மற்றவர்கள் புதிது புதிதாக கண்டுபிடித்துக்கொண்டே இருக்கட்டும், நாம் அதற்கு தமிழில் என்ன பெயர் என விவாதித்துக்கொண்டே
இருப்போம்.

வீக்கெண்டுன்னா ஜாலியா ஊரு சுத்துறதுக்கும் சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுக்குறதுக்குன்னு நெனஷ்ட்டு இருந்தேன்... ஆனா, யூனிஃபார்ம ஊறபோட்டு தொவைக்குறதுக்கும், காயவச்சி அத ஐயன் பண்ணி மடிக்கிறதுக்குமே நேரஞ் சரியாருக்கு...
#குடும்பஸ்த்ரீன்னாலே_கிச்சாதான

சில்லறைப் பிரச்சனையைச் சமாளிக்கக் கன்டக்டரிடம் மட்டும்தான் விக்ஸ் மிட்டாய் இல்லை.

CBSE, MATRIC, STATE BOARD என்று எல்லாமே கல்வி அல்ல... தேர்வு எனப்படும் எக்ஸாம்கள்தான் என்கிற புரிதல் இல்லாத ஒரு சமுதாயத்தை கடந்த 20 வருடங்களாக பார்த்து வருகிறேன். இப்போகூட என் பையனை சி.பி.எஸ்.இ சிலபஸ்ல சேர்த்திருக்கிறேன் என்று பேசுவதை கேட்கும்போது அதிர்ச்சியாக இருக்கும். போட்டித்தேர்வுகளை விட்டுவிடுவோம்... ஆனால், பள்ளிக்கல்வியில் சிலபஸ் எனும் பாடத்திட்டம் சமச்சீர் முதல் சி.பி.எஸ்.இ வரை ஒன்றே ஒன்றுதான். அந்த அனைத்து தேர்வுகள்ல நடத்தும் போர்டுகளுக்கும் அந்த ஒரே சிலபசை குடுப்பதும் NCERTதான் என்று யார் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் புரியவைப்பது?!

மனிதர்களை பற்றி நாம் மிக உயரிய மதிப்பீடுகளை கொண்டிருக்கிறோம். ஆனால், இயற்கையமைப்பில் மனிதர்களை போல் மிகக்கீழ்மையான உயிரினம் எதுவுமில்லை. விலங்குகள் எல்லாம் நிஜ தாக்குதல்களுக்கே எதிர்வினை புரியும். மனிதன்தான் தன் கற்பனைகளுக்காக இல்லாத ஒன்றுக்காக கற்பிக்கப்பட்ட எல்லைகளுக்காக சகமனிதரை அவமதித்தும் கொல்லவும் துணிபவன்.

அயர்ன செய்யாததை
சுருக்கமாய் சொல்லிவிடுகிறது
சட்டை!

இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மஹாராஷ்டிராவுக்கு முதல் இடம். குறிப்பாக, தற்கொலை செய்துகொள்ளும் அரசு அலுவலர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. மஹாராஷ்டிராவுக்கு இரண்டாவது இடம்.தொழில் வளர்ச்சி, கல்விக் குறியீடு போன்றவற்றில் தமிழகமும் மஹாராஷ்டிராவும் எப்போதும் முன்னணியில் இருக்கும் மாநிலங்கள். இந்த தற்கொலை எண்ணிக்கை உண்மையிலேயே கவனத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று.
நாம் முக்கியமான ஏதோ ஒன்றைத் தவற விடுகிறோம்!

ஹலோ பழக் கடைக் காரரே ஏழைகளின் தக்காளி ஒரு கிலோ குடுப்பா...
எதே... ஏழைகளின் தக்காளியா..!!??
அதாங்க ஆப்பிள்...

சொற்களால் வலித்து
விடப் போகிறதென்று
காமத்தை மோகம் என்கிறாய்
புணர்ச்சியை கூடல் என்கிறாய்
நிர்வாணத்தை பிறந்தமேனி என்கிறாய்
காதலை அன்பு என்கிறாய்.

பாதுகாப்பாயிரு,
இத்தனை மென்மையான உன்னை
யாரும் எளிதில் அழச் செய்யலாம்

தக்காளி
என்னமோ மத்ததெல்லாம் கம்மியா விலை விற்கிற மாதிரியும் தக்காளி நான் மட்டும் எக்கச்சக்கமா விலை உயர்ந்த மாதிரியும் சொல்லிக்கிட்டு திரியறீங்களே?

அம்மாவின் சாம்சங் மொபைல் திடீரென்று அணைந்து பிறகு ‘ஆன்’ ஆகவேயில்லை. பேட்டரியும் நிறைவாகவே உள்ளது. பிரச்சனையைக் கண்டறியும் பொருட்டு சில பல யூட்யூப் வீடியோக்களை மேய்ந்தபோது, அதிலொன்றில் மொபைலை ஒரு பாலிதீன் கவருக்குள் போட்டு ஃப்ரிட்ஜ் ஃப்ரீஸரில் ஒரு பதினைந்து நிமிடம் வைத்தால் ஆன் ஆகிவிடும் என்றார்கள். அப்படியே செய்தேன். பதினைந்து நிமிடம் கழித்து சில்லிட்டுப் போயிருந்த மொபைலை வெளியே எடுக்கும்போது திரையில் சாம்சங் லோகோ ஒளிர்ந்துகொண்டிருந்தது ஆச்சரியம்.

ஆனால் அதுவரை மட்டுமே பலனளித்தது. திரை லோகோவிலேயே ஒரு மணி நேரமாக நின்றுகொண்டிருந்தது. இதற்கான தீர்வுக்காக அடுத்த வீடியோவைத் தேடப் போய், அதில் நெருப்பில் போடச் சொன்னால் கஷ்டம் என்று சர்வீஸ் செண்டருக்கு வந்திருக்கிறேன்.

முத்தம் என்பது உதடுகள் குவிப்பது அல்ல... உணர்வுகள் குவிப்பது

காதலி உள் ளவர் களுக்கு பாஸ்வேர்டு குழப்பம் வராது. காதலிகள் உள்ளவர்களுக்கு பாஸ்வேர்டு குழப்பம் கண்டிப்பாக வரும்.

புத்தகத்தை தலைகீழாக வைத்துக்கொண்டிருக்கும் வரை குழந்தைகள் நேராகவே இருக்கிறார்கள்.  அறிவு எட்டுகையில் தலைகீழாக மாறுகிறார்கள்...

தூங்கறதுக்காக பாட்டுங்க கேட்டேன். நல்லாருக்குன்னு
விடிய விடிய கேட்டுட்டே இருந்தேன்...