ட்ரீம் கேர்ள்!
‘பெல்லி சண்டாடி’ என்ற ஒரே படம்தான். அப்படத்தின் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரீலீலாவை உச்சத்தில் கொண்டு வைத்திருக்கிறார்கள் தெலுங்கு சினிமா ரசிகர்கள்.
அடுத்து மாஸ் மகாராஜா என்றழைக்கப்படும் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்த ‘தமாக்கா’ படத்தில் அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து கிறங்கிப் போனார்கள்.
இது போதாதா, இப்போது ஸ்ரீலீலாவின் கைவசம் 9 படங்கள். மகேஷ் பாபு, பவன் கல்யாண், விஜய் தேவரகொண்டா, ராம் பொத்தினேனி என எல்லாருமே டாப் லெவல் ஹீரோக்கள்தான் ஸ்ரீலீலாவின் ஜோடியாக நடிக்கிறார்கள்.
இதனால் ஓய்வே இல்லாமல், டபுள் ஷிஃப்ட்டில் தினமும் ஷூட்டிங்கில் இருக்கும் பிஸியான நடிகை என பெயரெடுத்து இருக்கிறார் இந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அழகி. தெலுங்கு சினிமாவின் ‘அதிகம் ரசிக்கப்படும்’, ‘அதிகம் நேசிக்கப்படும்’, ‘அதிக மவுசு இருக்கும்’, ‘அதிக டிமாண்ட் இருக்கும்’ மருத்துவ மாணவியான லீலா, எப்பொழுது தமிழுக்கு வரப் போகிறார்..? விரைவில் என்கிறது கோலிவுட் பட்சி.வாம்மா மின்னல்!
காம்ஸ் பாப்பா
|