இயக்குநராகும் சிம்ரன்!
சிம்ரனுக்கு இப்போது நடிப்பது போரடித்துவிட்டதாம். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதில் சுவாரஸ்யமே இல்லையாம். இதனால் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தவரை, டைரக்டராக களமிறங்குமாறு அவரது கணவர் தீபக் பாஹா உற்சாகப்படுத்தி இருக்கிறாராம்.
 இதனால் இயக்குநராகும் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் சிம்ரன். ஆனால், கதை அவருடையது அல்லவாம். இப்போதைக்கு கதையை வெளியில் இருந்து வாங்கவே முடிவு செய்திருக்கிறாராம்.
இதனையடுத்து தில்லியில் இருந்தவாறே கதைகளைக் கேட்க ஆரம்பித்திருக்கும் சிம்ரன். வித்தியாசமான கதைகள் இருந்தால் மட்டுமே கேட்கிறார். அதுவும் இன்றைக்குள்ள டிரெண்டுக்கு ஏற்ற கதைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வருகிறார். குறிப்பாக உணர்வுபூர்வமான, இக்காலத்து உறவுகளைப் பற்றிய கதைகளை ஆர்வத்துடன் கேட்கிறார்.சிம்ரன் கதை கேட்பது குறித்து கேள்விப்படும் உதவி இயக்குநர்கள் அவரது ஷூட்டிங் எப்போது சென்னையில் நடக்கும் என விசாரித்தபடியே இருக்கிறார்கள்.
காம்ஸ் பாப்பா
|