வலைப்பேச்சு



நமது எல்லாப் பிரச்சனைகளையும் மற்றவரிடம் கொட்டித் தீர்த்தால்தான் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது - மற்றவர்களுக்கு

வருங்காலத்தில் உலகில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் என்றால் அது lays கம்பெனிகாரன் மூலமாகத்தான் நிகழும்.
ஐந்து ரூபாய் பாக்கெட்டில் பத்து ரூபாய் பெறுமான காற்றை அடைத்து வைத்திருக்கிறான்.

நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருக்கும் மருமகள் - அங்கிள் இன்னிக்கிதான் டிரைவர் வரல இல்ல. நான் கார் ஓட்டறேனே உங்களுக்கு.மீ - சரிமா வாம்மா... போன மீட்டிங் முடிந்து, அலுவலகம் வருகையில் -மம - லஞ்ச் டைம் ஆயிருச்சி... நாம ஏன் kfc போகக்  கூடாது..?மீ - நீ ரொம்ப காஸ்ட்லியான டிரைவர்மா.கம்பனிக்கு கட்டுபடியாகாது.

வெறுப்பும், விலகலும் ஒன்றல்ல. வெறுத்தபடி உடன் இருத்தலும் பிரிந்து நின்று விரும்புதலும்
சாத்தியமே.

Comfort zone என்பது கண்ணாமூச்சி ஆட்டத்தில் தேடி போய் ஒளிந்து கொள்ளும் இடம் போல. Stress , depression, mind swing போன்ற நேரங்களில் பாடல்கள் கேட்பது, பாடுவது, நடனம், யோகா , நடைப்பயிற்சி என எதையாவது செய்து கொண்டு நம்மை ஒளித்து வைக்கிறோம்.ஆனால், என்னதான் கதவு பின்னாடி, கட்டிலுக்கு கீழே என்று தோதான இடம் தேடி மறைந்து கொண்டாலும், ‘கண்டுபிடிச்சிட்டனே’ என்று முதுகில் டப்பா அடித்து, இழுத்து வெளியே போட்டு விடும் வாழ்க்கை.

தமன்னாவின் லேட்டஸ்ட் ஹாட் லுக் ஒன்றை அவர் தனது இன்ஸ்டாவில் பதிந்திருக்கிறார். விஜய் வர்மா அந்தப் படத்துக்கு பயர் எமோஜி விட ஏற்கெனவே இருவரும் டேட்டில் இருப்பதாகப் பரவும் புரளி தீயில் எண்ணெய் விட்டிருக்கிறார்கள். கோவாவில் இருவரும் முத்தமிட்டுக்கொண்ட புகைப்படம் இதற்கு முன் வைரலாகியிருந்தது.

கல்வி உதவி கோரிக்கைக்காக அழைப்பு ஒன்று வருகிறது புதிய எண்ணில் இருந்து. வழக்கமான பேச்சிக்களுக்கு பின் ‘அப்பா அம்மா என்ன பண்ணுறாங்க’ன்னு கேட்டபின் சில வினாடி பெருத்த அமைதிக்கு பிறகு ‘அவர்கள் இல்லைண்ணா... உங்க கிட்டே அந்த அக்கா பேசச் சொன்னாங்கன்’னு சொல்லும்போது குரல் உடைந்து இருந்தது. சிலநேரம் தவிர்க்க முடியாமல் சில கேள்விகள் கேட்கதான் தேவையிருக்கிறது. ஆனால் அந்தக் கேள்விகள் பதின்பருவத்தினரின் சுயமரியாதையை சுட்டு விடுகிறதோ என்னும் எண்ணமும் வந்து போகிறது.
#என்னான்னு_சொல்ல
#இனியன்

தலைக்கனத்தோடு இருந்தா (சீக்கிரம்) அழிஞ்சு போயிடுவோம்’ங்கிறதுக்கு சிறந்த உதாரணம் தீக்குச்சி...

கடவுளை விடகடவுள் நம்பிக்கைதான்அதிகம்பேரை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது


நீ தவறாகப் புரிந்துகொண்டாயென நான் விளக்கம் தரத் தொடங்கியபோதேபாதி தோற்றுவிட்டேன்.

முன்பெல்லாம் எங்கள் ஊரில் நடக்கும் அரசியல் கூட்டங்களில் ஊராட்சி மன்றத் தலைவர், கவுன்சிலர், ரிட்டயர்டு தலைமை ஆசிரியர், கட்சியின் மாவட்ட செயலாளர் என சில முக்கிய லோக்கல் தலைகள் மேடையில் அமர்ந்திருக்க பேச்சாளர்கள் ‘ஏ அமேரிக்க ஏகாதிபத்தியமே, ஏ இங்கிலாந்து காலனியாதிக்கமே’ என்றெல்லாம் குரல்வளை புடைக்க பேசுவார்கள். அவர்களின் அடுத்த தலைமுறை இப்போது பேஸ்புக்கில் கிரிக்கெட் வீரர்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என்று பாடமெடுக்கிறது.

இன்ஸ்டாவில் வைரலாகவேண்டும் என்ற வெறி பலரையும் என்னென்னவோ செய்ய வைக்கிறது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த மணமகள் ஒருவர் காரின் முன்புறம் அமர்ந்து ஜானவாசம் (?) செய்த வீடியோ ஒன்று இன்ஸ்டாவில் பரவியது. இதை அடுத்து போலிசார் இவருக்கு 15,500/- ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள்.

தினமும் லட்சம் மலர்களை மலர்த்துகிறது, யாரும் கடந்து உள்வந்து காண இயலாத  மழைக் காடு. தன் இயல்பில், தன் வண்ணங்களில், தன் தனி நடனத்தில் தானே மகிழத் தெரிந்த பின்பே அதற்குச் சாத்தியமானது இத்தனை பெரிய மலர்தல். அதற்குப் பிறகு ஒரு நாளும் அதை நிறுத்தவில்லை.

மறுபடியும் வீட்டுத் தபால் பெட்டியை நான் திறந்து பார்க்கவில்லை.அந்த மூன்று ஊதா நிற முட்டைகள் பொரிந்துவிட்டதா என்று அறிந்து கொள்ளவில்லை.
நான் நம்புகிறேன்.ஒன்று, இதற்குள் மூன்று பறவைகள் பறந்துபோயிருக்கும்.அல்லது இனி பறந்து போகும்.வானத்தின் ஊதா நிறம் ஏற்கனவே அவற்றிற்குச் சொல்லித்தரப் பட்டிருக்கிறது.


நெஞ்சுக்கு நெருக்கமானோர் பேசிடும் கடுஞ்சொற்களுக்கு எப்போதுமே அர்த்த பாரங்கள் அதிகம்.

சொல்ல முடியாத சோகங்களும் நினைவுகளும் ஒவ்வொருவர் மனதிலும் உண்டு.யாரும் மறந்து வாழவில்லை. மறைத்துதான் வாழ்கிறோம்...!!

‘‘ப்ரோ உங்களை சின்னதா பேட்டி எடுத்துக்கறேன். உள்ளது உள்ளபடி சொல்லுங்க.’’
“ப்ரேம்ல தொப்ப தெரியல இல்ல”
‘‘தெரியல சார். முதல் கேள்வி. உங்க எழுத்துப்பயணம் எப்ப துவங்குச்சு?’’
‘‘அப்ப எனக்கு நாலு வயசு இருக்கும்னு நினக்கிறேன்’’
\”வாவ் நாலு வயசிலா? இருங்க மைக் கிட்ட வந்து பேசுங்க’’
\”ஆமா அப்ப தான் துவங்குச்சு. அப்பதான் அ, ஆ, A,B,C,D எல்லாம் எழுத துவங்கினேன்’’
‘‘.....’’
‘‘ப்ரூ, நில்லுங்க, ஏன் ஓட்றீங்க’’

தான்சானியாவின் கிலி பால் பாலிவுட் வீடியோக்களை லிப் சிங்க் செய்து வெளியிடும் வீடியோக்கள் எல்லாம் இன்ஸ்டாவில் ஹாட் வைரல். அவர் சமீபத்தில் ‘ராம ஜெயம்...’ பாடலை இப்படி லிங் சிங்க் செய்து வெளியிட்டிருக்கிறார். வழக்கம் போல் நெட்டிசன்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

பலருக்கும் புகைப்பழக்கத்தை விட்டு விடுவது எனும் விடாமுயற்சி கூட ஒரு பழக்கமாகிப் போய்விடுகிறது !

ரகசியங்களுக்கும் சொற்களுக்குமான கண்ணாமூச்சி விளையாட்டில் நானும் தொலைந்து போகும் ரகசியங்களில் ஒன்று.