உலகின் ஆணழகர் இவர்தான்!
புகைப்படத்தைப் பார்த்து சட்டென்று உதட்டைப் பிதுக்காதீர்கள்... அறிவியல் பூர்வமாக நடிகர் Rege-Jeneதான் உலகின் சிறந்த ஆணழகர் என நிரூபிக்கப்பட்டுள்ளாராம்!அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பழமையான கிரேக்க கோல்டன் ரேஷியோ ஆஃப் பியூட்டி விகிதத்தின்படி, இவர் 93.65 சதவீதம் துல்லியமாக பொருந்துவதாக மதிப்பிடப்பட்டிருக்கிறார்!

லண்டனைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜூலியன் டி சிவாவின் கூற்றுப்படி, பேஜ் தனது அழகான முகம் மற்றும் அழகான பழுப்பு நிற கண்களால் அழகான மனிதர் என்று கருதப்படுகிறாராம்.
அதாவது அவரது கண் இடைவெளி மற்றும் அவரது கண்களின் நிலைப்பாட்டுக்காக இந்த மதிப்பெண்களை எளிதாக பெற்றதாக சொல்கிறார்.‘பிரிட்ஜெர்டன்’ படத்தில் நடித்ததற்காக பிரபலமானவர்தான் ரீஜ்-ஜீன். இப்போது உலகின் ஆணழகர் என்ற அடிப்படையில் பிரபலத்துக்கே பிரபலமாகி விட்டார்!
காம்ஸ் பாப்பா
|