பெரிய வாழைப்பழம்!



ஒரு கிலோ வாழைப்பழம் வாங்கினால் அதில் குறைந்தது 5 பழங்களாவது இருக்கும். ஆனால், பப்புவா நியூ கினியில் விளையும் ‘Giant Highland Banana’ என்ற வாழைப்பழத்தை ஒரு கிலோ வாங்கச் சென்றால் ஒரு பழத்தில் கொஞ்சத்தை வெட்டித்தான் கொடுப்பார்கள்!அதன் சைஸ் அப்படி! ஆம். ஒரு பழம் மட்டுமே சுமார் 6 கிலோ வரை இருக்குமாம்.

இந்த வாழைப்பழம் விளையும் வாழை மரம் மூசா இன்ஜென்ஸ் [Musa Ingens] என்று அழைக்கப்படுகிறது. இந்த மரங்கள் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளில் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.
இருப்பினும், பப்புவா நியூ கினியில்தான் அதிக உயரமாக வளர்கிறது. 15 முதல் 30 மீட்டர் உயரம் வரை இந்த வாழை மரங்கள் வளர்கின்றன.

இந்த வாழை மரங்கள் காய்ப்பதற்கான காலமும் அதிகம். அதாவது 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும். இந்த வாழை மரங்கள் வெப்பமண்டலத்தில் தாழ்வான பகுதிகளில் வளராது. மேட்டுப்பகுதியில் அதுவும் பகலில் குளிர்ச்சியாகவும், இரவில் ஈரமான மற்றும் சூடான மிதமான காலநிலையில்தான் வளரும்.

காம்ஸ் பாப்பா