ஆப்கானிஸ்தானின் முதல் கார்!
தீவிரவாதம், குண்டுவெடிப்புகள், பெண் அடிமைத்தனம்... என்ற செய்திகளே வந்துகொண்டிருந்த ஆப்கானிஸ்தானில் இருந்து முதல் முறையாக ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Mada 9 என்ற சூப்பர் காரை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது தலிபான் அரசு.தலிபான் அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரான அப்துல் பாகி ஹக்கானி இந்த காரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் ENTOP என்ற நிறுவனம் சுமார் 5 ஆண்டுகாலம் பல்வேறு ஆய்வுகளை நடத்தி இந்த சூப்பர் காரை உருவாக்கி உள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 30 பொறியாளர்கள் இணைந்து இந்தக் காரை வடிவமைத்ததாக ENTOP நிறுவனம் தெரிவித்துள்ளது.
டயோட்டா கொரோலாவின் இஞ்சினைக் கொண்டு இயங்கும் இந்த காரின் செயல்பாடு சாலைகளில் எப்படி இருக்கும் என்பது பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் கார்களின் திறனுக்கு சற்றும் குறையாமல் இந்த காரின் திறன் இருக்கும் என்று இதை வடிவமைத்துள்ள பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காம்ஸ் பாப்பா
|