ஹீரோயின் ஆகும் அஜித்தின் ரீல் மகள்!
யெஸ். ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, இப்போது குமரியாகி கதாநாயகியாக நடிப்பதற்காக முழுமூச்சில் இறங்கியிருக்கிறார்.அழகைக் காட்டும் கவர்ச்சி ஆடைகளில் ஃபோட்டோசெஷன் எடுத்து அதை தமிழ், தெலுங்கு சினிமா வட்டாரத்தில் உலாவ விட்டிருக்கிறார்.
 சம்பள விஷயத்தில் கொஞ்சம் கறார் காட்டுவதோடு, இளம் ஹீரோக்களுடன் மட்டுமே என் மகள் நடிப்பார் என்றும் கூடவே ஒரு கண்டிஷனும் போடுகிறாராம் அனிகாவின் தாயார்.அன்று மீனா. இன்று அனிகா. யாருக்கு தெரியும்... அஜித்துக்கு ஜோடியாக அனிகா நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றும் சிலர் கொளுத்திப் போடுகிறார்கள்!
காம்ஸ் பாப்பா
|