ஓணம் நடிகைகள்!



தமிழ்நாட்டில் ஒணம் என்றால் உடனே நினைவுக்கு வருவது அந்த வெள்ளை சேலை அணிந்த பெண்கள்தாம். கேரள பெண்கள் அணியும் அந்தப் புடவை ‘கசவு புடவை’ என்று அழைக்கப்படுகிறது.
கல்லூரிகளில், வேலை பார்க்கும் இடங்களில் கேரளப் பெண்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டுப் பெண்களும் கேரள புடவையை அணிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆண்கள் குர்தா மற்றும் வேஷ்டி அணிந்தும் பெண்கள் கேரள புடவையை அணிந்தும் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டனர். கூடவே ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ‘நட்பே துணை’ படத்தில் வரும் -

ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம்
விஜயன் ஆனோ
எங்க டான்சு
கதக்களி ஆனோ
எனக்கு நீ
வேணும் அடியே...

பாடலை வைத்து சமூகவலைத்தளங்களில் அதிகமாக டிரெண்ட் செய்தனர். இதில், அதிகமாக ஹீரோயின்கள் பதிவிட்ட புகைப்படங்களும் வைரல் ஆகின.
அந்தவகையில் அதிகமாக பகிரப்பட்ட மற்றும் பல லைக்குகளை அள்ளிய செலிப்ரிட்டி போஸ்ட்டைப் பற்றியும், கேரள புடவையில் என்ன வித்தியாசங்களைக் கொண்டு வந்தனர் செலிப்ரிட்டீஸ் என்பதைப் பற்றியும் ‘முண்டு கட்டி’ பார்க்கலாம்!

விக்னேஷ் சிவன்,  நயன்தாரா

விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் இணைந்து போட்ட அனைத்து போஸ்டும் இன்ஸ்டாவில் வைரல்தான். ஓணம் பண்டிகையை குடும்பமாக கொண்டாடும் வகையில் தனது இரு மகன்களும் ஒன்றாக அமர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் அவர்கள் இருவரும் கப்புள் கோல்ஸ் ( couple goals ) ஆகவும் போஸ்ட் செய்துள்ளனர். இதில் நயன்தாரா வெண்ணிறத்தில் சுடிதார் அணிந்திருக்கிறார். இதுவும் அதிக அளவில் பகிரப்பட்டது.

கீரத்தி சுரேஷ்

தனது கேரள புடவை போஸ்ட் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றவர் கீர்த்திதான். இப்போதெல்லாம், என்ன புடவை அணிந்திருக்கிறார்கள் என்பதை விட அதற்கு என்ன டிசைன் பிளவுஸ் அணிந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளத் தான் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்படி பார்க்கும் பொழுது கீர்த்தி தனது பிளவுஸ் டிசைனில் சற்று வித்தியாசம் காட்டியுள்ளார். கூலர்ஸ் அணிந்துகொண்டு கூலாக போஸ் கொடுத்திருக்கிறார் கீர்த்தி.

மடோனா செபாஸ்டியன்

மடோனா செபாஸ்டியன், கேரள புடவை அணிந்து தனது ஜுவல்லரி மூலம் வித்தியாசம் காட்டியுள்ளார். அவர் புடவை கட்டிய விதமும் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஓணம் பண்டிகையை கேரளாவில் 10 நாட்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடுவர். இவர் ஓணம் நாள் மட்டும் இல்லாமல் அதற்கு முன்னதாகவே தனது போஸ்ட் மூலம் ஓணம் பண்டிகையை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்.

மாளவிகா மோகனன்

‘கசவு புடவை’ என்று அழைக்கப்படுகிற கேரள புடவை மீது ‘எப்பொழுதும் எனக்கு தீரா காதல்’ என்று பதிவிட்டிருக்கிறார் மாளவிகா. சிம்பிளான லுக்கில் போஸ்ட் போட்டிருக்கிறார்.
ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து அவரது காதணியில் வித்தியாசம் காட்டி கலக்கியிருக்கிறார்.

நிக்கி கல்ராணி

‘முகம் காட்டு நீ, முழுவெண்மதி...’ என்ற பாடலின் மூலம் அனைவரையும் கவர்ந்த நிக்கி, ஓணம் பண்டிகைக்காக அவர் உடுத்திய கேரள புடவையில் முழுவெண்மதியாகவே தெரிந்தார். ஆரஞ்சு நிறத்தில் முழு நீள பிளவுஸ் அணிந்து புடவையில் ஆரஞ்சு நிற சரிகை வைத்து சற்று வித்தியாசமாக தனது ஓணம் லுக் போஸ்ட்டை பதிவிட்டிருந்தார்.

காம்ஸ் பாப்பா