மாரத்தான் தம்பதி



ஓட்டப்பந்தயங்களில் அதிக தூரம் கொண்ட ஒரு போட்டி, மாரத்தான். அதுவும் சாலையில் தொடர்ந்து ஓடவேண்டும். பந்தய தூரம் 42.195 கிலோ மீட்டர். இப்போட்டியில் கலந்து

கொண்டு பந்தய தூரத்தை நிறைவு செய்வதே பலருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. முதல் ஆளாக வருவது எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
ஒரு முறை மாரத்தான் ஓடினாலே கை, கால்கள் வலிக்க ஆரம்பிக்கும். அடுத்த நாள் எந்த வேலையும் செய்ய முடியாது. ஆனால், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஃபே கன்னிங்காம் - எம்மா என்கிற தன்பாலின  தம்பதியினர் தினமும் மாரத்தான் ஓடியிருக்கின்றனர்.  அதுவும் ஒரு வாரமோ, பத்து நாட்களோ இல்லை.

106 நாட்களில் 106 முறை மாரத்தான் ஓடி சாதனை புரிந்திருக்கிறது இந்த தம்பதி. ஒரு நாள் தவறாமல் அவர்கள் ஓடியிருப்பதுதான் இதில் ஹைலைட். ஃபேவின் தந்தை டிமென்ஷியாவால் இறந்துபோய்விட்டார். அவரைப் போலவே டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த தம்பதியினர் மாரத்தான் ஓடியிருக்கின்றனர். தொடர்ந்து அதிக முறை மாரத்தான் ஓடியதால் ‘மாரத்தான் தம்பதி’ என்று சுற்றியிருப்பவர்களால் புகழப்படுகின்றனர்.

த.சக்திவேல்