டிரைவிங் பாட்டி!
கேரளாவைச் சேர்ந்த ராதாமணி என்ற பாட்டியைப் பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். இவரது வயது 71. கேரளாவில் கனரக வாகனம் ஓட்டுபவர்களுக்காக டிரைவிங் கற்றுக்கொடுக்கும் பள்ளியை நடத்திவரும் முதல் பெண் ராதாமணிதான். கணவரின் வற்புறுத்தலால் தனது 30 வயதில் கார் ஓட்டக் கற்றுக்கொண்டார் ராதாமணி.
 வாகனம் ஓட்டுவது அவருக்குப் புதுவித அனுபவத்தைத் தர டிரைவிங்கின் மீது காதலே பிறந்துவிட்டது. தன்னைப்போலவே டிரைவிங் ஆர்வம் உள்ளவர்களுக்கு டிரைவிங் கற்றுக்கொடுக்க ஒரு பள்ளியை ஆரம்பித்தார். சில வருடங்களுக்கு முன் கணவர் இறந்துவிட, அந்தப் பள்ளிதான் ராதாமணியின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்தது. இன்று பஸ், கிரேன், ரோடு ரோலர், ஜேசிபி, டிரெய்லர், ஃபோர்க் லிஃப்ட், ஆட்டோ, கார்... என 11 விதமான வாகனங்களை ஓட்டும் உரிமத்தை வைத்திருக்கிறார் ராதாமணி. இதுபோக மெக்கானிக்ஸ் குறித்து நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் டிப்ளமோ படித்துவருகிறார். இந்த டிப்ளமோவை படிக்கும் அதிக வயதான பெண்மணியும் இவரே.
த.சக்திவேல்
|