Data Corner



*வருடம் தோறும் ரூ.28,500 கோடி வருமானத்தை கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடுகள் செல்ல பஞ்சாபிகள் செலவிடுகிறார்கள்.

*அமெரிக்காவில் 2021ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 24,000 பேர் காதல் மோசடியில், ரூ.100 கோடி டாலரை இழந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

*இந்திய சிறைச்சாலைகள் குறித்த 2020ம் ஆண்டு அறிக்கையின்படி, இதுவரை இல்லாத அளவு விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2019 டிசம்பரில் 69% ஆக இருந்தது 2020 டிசம்பரில் 79% ஆக உயர்ந்துள்ளது.

*2021ம் ஆண்டு இந்தியாவில் 30.82 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையான நிலையில், 2021ம் ஆண்டு 46 லட்சம் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

*1920க்குப் பிறகு முதன்முறையாக கடந்த 1990ல் பிறந்து இப்போது 30 வயதாகும் பெண்களில் சுமார் 50 சதவிகிதத்தினர் குழந்தையை தாமதமாகப் பெற்றுக்கொள்ள விரும்புவதாக கூறி இருக்கிறார்கள்.

*ஒவ்வொரு நாளும் சராசரியாக 35 முதல் 40 கப்பல்கள் வரை பனாமா கால்வாய் வழியாகச் செல்கின்றன. இக்கால்வாய் இல்லாவிட்டால், கப்பல்கள் சுமார் 20 ஆயிரம் கிலோமீட்டர்கள் சுற்றிச் செல்ல நேரிடும்.

சுடர்க்கொடி