கீர்த்தி சுரேஷ் அணிந்திருக்கும் இந்த உடையின் விலை ரூ.2 லட்சத்து 10 ஆயிரம்!



பச்சை நிறமே... பச்சை நிறமே... இப்படித்தான் கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்களுக்கு ஹார்ட்டின் போட்டுக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். வாவ்! இந்த லுக் செமயா இருக்கு... என டிசைனர் ஸ்வப்னா அனுமோலை தொடர்பு கொண்டோம். ‘‘கடந்த ரெண்டு வருஷங்களா உலகமே ஒரு டார்க் ஷேட்ல இருக்கு...
குறைஞ்சபட்சம் உடைகளாவது நல்ல பிரைட் கலர்ல கொடுப்போமேனு நினைச்சு உருவாக்கினதுதான் இந்த லெஹெங்கா. பிரைட்... அதேசமயம் நேச்சுரல் லுக்... இதெல்லாம் கிடைக்கணும்னா பச்சை நிறம்தான் பெஸ்ட் சாய்ஸ். கீர்த்தி சுரேஷின் அடுத்த படமான ‘குட்லக் சாகி’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காகத்தான் இந்த டிரஸ்ஸை கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்தாங்க.

அடிப்படைலயே பச்சைநிறம்னா பசுமை, அதிர்ஷ்டம், செழிப்பு... கூடவே குட் லக்! இதையெல்லாம் மனசுல வெச்சுதான் கீர்த்தி சுரேஷ் இந்த உடையை தேர்வு செய்திருப்பாங்கனு நினைக்கறேன்...’’ என்னும் ஸ்வப்னா, லெஹெங்காவின் டிசைன் விபரங்கள் குறித்து பகிர்ந்தார்.

‘‘இந்த லெஹெங்காவை முழுக்க முழுக்க ஹேண்ட் எம்பிராய்டரி செய்து உருவாக்கியிருக்கோம். இதுல வர்ற வெள்ளை நிற டிசைன்ஸ் அத்தனையும் பாசி, ஜர்தோசி, முத்துக்கள்! இதையெல்லாம் முழுமையா கைகளால ஆரி வேலைப்பாடுகள் செய்திருக்கோம். தவிர லெஹெங்கா முழுக்கவே பிளைன் ஆர்கன்சா மெட்டீரியல்ல டிசைன் செய்திருக்கேன். ஆர்கன்சா... கூடவே ஆரி ஒர்க் காரணமா இந்த லெஹெங்கா விலை ரூபாய் இரண்டு லட்சத்து பத்தாயிரம்! இந்த உடைக்கு ரொம்ப சூப்பரா ஸ்டைலிங் செய்து இருந்தாங்க அர்ச்சா மேதா.

பச்சை தவிர நல்ல க்ரீம் கலர், லைட் வயலட், ஆரஞ்சு, லெமன், மஞ்சள்... இப்படியான கலர் மெட்டீரியல்ஸ்ல அவங்கவங்க விருப்பப்படி எந்த கலரை வேணாலும் தேர்ந்தெடுக்கலாம். ஆக்சஸரீஸ் கூட முத்து, பீட்ஸ், சில்வர் நகைகள் போட்டுக்கலாம். லெஹெங்கா மட்டுமில்லாம இந்த பேட்டர்ன்ல அனார்கலி சல்வார், டாப்ஸ்... ஏன் புடவை கூட இந்த டிசைன்ல வடிவமைக்கலாம்...’’ என்னும் ஸ்வப்னாவுக்கு இந்த லெஹெங்கா டிசைனில்தான் ஏகப்பட்ட ஆர்டர்கள் வருகிறதாம். காதலுக்கு ஓகே சொல்லும் நிறம் கூட பச்சைதானே!

மேக்கப்: விஷால் சரண்
நகைகள்: ஜதின் மோர் ஜுவல்லர்ஸ்
ஹேர் ஸ்டைல்: தேஜ் சிங்.


செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: நிஷத் பாத்திமா